உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. பதிப்புப்பாடுகள்

தாமோதரர் எழுதிய பதிப்புரைகளிலே பதிப்புப் பற்றிய பல அரிய செய்திகள் பொதுளியுள்ளன. "ஏட்டுப்படிகளில் காலந்தோறும் புகுந்த எழுத்துப் பிழையும் சொற் சிதைவும் சொற்றொடர்ப் பிறழ்வும் இத்துணைய என்று சொல்லுதற்கு இயலாது" என்று கூறும் தாமோதரர் இராமாயண ஏட்டுப்படி குறித்து ஒரு செய்தியை எழுதுகின்றார்:

ஏடு

இராமாயண அரங்கேற்றத்தின் பின்னர்க் கம்பர் சோழன் மேற்கொண்ட வெறுப்பால் சேரநாடு சென்று 20, 30 ஆண்டுகளின் பின் சோழனைக் காண வந்தாராம். வரும் வழியில் ஓரிடத்தில் இராமாயண ஏட்டுச் சுவடிகள் படியெடுக்கப் படுவதைக் கண்டாராம். சுவடி தோறும் வழுவும் திரிபும் மிக்கிருந்தனவாம். இடைக்கிடை சொருகு கவிகள் இருப்பதும் கண்டாராம், இதனைக் கூறும் தாமோதரர்,"ஒரு புலவர் வாழும் காலத்திலேயே அவர் சுவடி நிலைமை இத்தகைத்து ஆயின் ஆயிரத்தைந் நூறு ஆண்டுத் திரிபு எப்படி இருக்கலாம் என்பதை எண்ணிக் கொள்க" என்கிறார்.

நாடுதோறும் வழங்கும் ஏடுகள் இத்தகைய எனவும் குறிக்கிறார். ஒரு தேசத்தில் வழங்கி வரும் பிரதிகளை மாத்திரம் பார்த்தார்க்கு இம்மாறுபாட்டின் பெருக்கம் தோன்றாது.

"மதுரைப் பிரதி திருநெல்வேலிப் பிரதிக்கு வேறு. யாழ்ப்பாணத்துப் பிரதி இவ்விருதேசப் பிரதிகட்கும் வேறு; தஞ்சாவூர்ப் பிரதி முதன் மூன்றிற்கும் வேறு; சென்னபட்டினப் பிரதிகள் இவையெல்லாவற்றிற்கும் வேறு."

என்பது அது.

ஏட்டெழுத்து :

ஏட்டிலுள்ள செய்தியை ஒழுங்குபடுத்துதல் எத்தகு கடினமான செயல் என்பதையும் குறிப்பிடுகிறார் :