உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

பொருள் கொள்வாரென எண்ணியாவது பார்க்க முடியுமா? இதற்குத் தாமோதரர் மறுப்புரைக்க எண்ணவில்லை எனினும் நாவலர் வழியே 'நல்லறிவுச் சுடர் கொளுத்தல்' வெளிப்பட்டது. இது நிற்க.

பதிப்பு விகற்பம் :

முன்னெல்லாம் படியில் உள்ளவாறு அன்றி மாற்றிப் பதிப்பிப்பதைக் கொள்ளாத தாமோதரர்க்குச் சில விகற்பம் செய்து பதிப்பிக்க வேண்டும் என்று எண்ணம் ஏற்பட்டது. அது கலித்தொகைப் பதிப்பிலே ஏற்பட்டது. அதனையும் பதிப்புரையில் இந்நூற் பதிப்பை ஏட்டுப் பிரதிகளின் போக்கிலே விடாது சிற்சில டங்களில் சில விகற்பங்கள் செய்திருக்கின்றேன். அவை இன்னவென உணர்த்தல் என் கடமையாம் எனக் கூறி வரிசையாகக் குறிப்பிடுகிறார். அவை :

1.

2.

3.

4.

பாட்டுக்கள் தோறும் முதலிலே அவ்வப் பாட்டின் முதற்குறிப்பைச் சொல்லி இஃதின்ன துறைத் தென்று கிளவி கூறிப் பின்னர்ப் பாட்டு வரும். அதனை யான் மாற்றி முதலிலே பாட்டை அச்சிட்டு அதன்கீழ் இஃதின்ன கிளவியெனக் கூறுங் கருத்துரையை அச்சிட்டிருக்கிறேன். பாட்டு முழுதும் ஒருங்கே தொடர்ந்து வராது. எடுத்துக்கொண்ட உரைக்கு வேண்டிய அளவாய்ப் பிளவுபட்டுப் பின்னம் பின்னமாய்க் கிடந்ததை ஒரு தொடராகச் சேர்த்து ஒவ்வொரு கலிப்பாவையும் முடித்த பின்னர் அவ்வப் பகுதியை முதலும் ஈறும் காட்டி மீளவும் பகுத்து அப்பகுதியின் உரையைப் பதிப்பித் திருக்கிறேன்.

விசேட உரைகள் சில உரைக்கு முன்னும் சில உரைக்குப் பின்னும் சில இடைப்பிற வரலாக உரைக் கிடையினும் கிடந்தவற்றை ஒரு கிரமப்படுத்தி அனைத்துப் பாடமும் உரையுமான பின்னரே வரும்படி சேர்த்திருக்கின்றேன். தரவு தாழிசை தனிச்சொல் சுரிதகமென நிகழும் பாட்டுறுப்புக்களில் மூலம் ஒன்றினும் உரை ஒன்றினுமாகச் சில இடங்களில் பிறழ்ந்து கிடந்தன வற்றை இரண்டும் ஓரிடத்தாம்படி உரையிடத்தை மாற்றியிருக்கின்றேன் இவ்விகற்பங்களிலெல்லாம் ஓரிடத்துக் கிடந்த வாக்கியத்தைப் பின்னோரிடத்தில் இடமாற்றி வைத்ததேயன்றி ஆசிரியர் மொழி நடைகளில் ஓரெழுத்தையாவது யான் மாற்றியதே இல்லை.