உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.

தமிழ் வளர்த்த தாமோதரனார்

137

இந்நூல் துரைத்தன வித்தியாசாலைகளிலும் பிற கல்லூரிகளிலும் பாடசாலைகளிலும் பயிலல் வேண்டு மென்னும் அவாவினாலே தற்காலம் அவையிற்றுக்கு இணங்காததோர் (இழி சொல்லும் மகளிரின் சிறப்பவய வத்தின் இடக்கர்ப் பெயருமாகிய) குஃறொடர்ந்த அன்மொழி இந்நூல் முழுவதினும் பதினோரிடத்திற் பிரயோகிக்கப்பட்டதை ஒழித்தும் செய்யுள் ஊனமுறா திருத்தற் பொருட்டு அதற்குப் பதிலாக அவ்வவ்விடத்திற்கு இசைந்த பிற அவயவத்தின் பெயரைச் சந்தத்திற்கு வேண்டிய டிய அளவு விசேணத்தோடு புணர்த்தியும் இருக்கின்றேன். அவ்வாறு சொருகியது இன்ன இன்ன மொழி இன்ன இன்ன பாட்டில் இன்ன இன்ன அடியில் என்பதை யாவர் ஒருவராயினும் அறிய விரும்பின் அவற்றை ஈண்டுக் காண்க. மாற்றி வைத்த பிரதி மொழியின் பொருளே உரையகத்தும் மாறியிருக்கும் என்பது சொல்ல வேண்டியதில்லை. இவ்வாறு மாற்றியது குற்றமாயின் அதனை உலகம் மன்னிக்கும்படி பல முறையும் பிரார்த்திக்கின்றேன்" என்பவை அவை. பாடமாற்றப்பட்டியையும் பதிப்புரையிலே தந்துள்ளார். பல்கலைக் கழகப் பாடத்திட்டத்திற்குத் தக்கவாறு பதிப்பித்த அப்பதிப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், 'செய்யக் கூடாதவை' எனப் பற்பல பேரறிஞர்கள் மிகக் கண்டித்து எழுதினர். அதனால், அத்தகைய இடக்கர்ச் சொற்களைச் சிதைத்து அச்சிடுதல் முறையன்று எனத் தெளிந்தார். எனினும் சூளாமணிப் பதிப்பில் ஒரு துணிவு பிறந்தமையைச் சுட்டுகிறார்.

"பிரதிகளில் இருக்கும் பாடம் ஆக்கியோன் வாய் மொழியாக இருக்க மாட்டாதென்றும் எந்தப் பிரதி வழிச் சென்றாலும் அச்சில் வருவது ஆசிரியரினின்றும் வேறுபட்ட பிழைப்பாடென்றும் நிச்சயிக்க ஏது உண்டான இடங்களில் இரண்டொரு எழுத்தையாவது மொழியையாவது சந்தர்ப்பத் திற்கும் பொருளுக்கும் இயையுமாறு திருத்தத் துணிந்தேன். அவ்வாறு செய்யாவிடின் நூலின் சிறப்பு அழிவதும் அன்றிச் சில பாடங்கள் ஒரு பயனும் தராமலும் சில முன்பின்னோடும் பிற நூல்களோடும் விரோதப்பட்டும்நிற்கும். ஆதலின், திருத்தம் அத்தியாவசியகம் ஆயிற்று. இதனை உலகம் அறியச் சொல்லாமல் விடுவதே தப்பென்று உண்ர்ந்து இங்ஙனம் தெரிவிக்கலானேன்” என்கிறார்.