உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

வெளியீட்டுக்கும் ஒருதொகை தருவதாக உறுதி கூறியுள்ளனர். தாள் வாங்கும் வகைக்காக முன்தொகை தந்து இழப்பு உண்டாகுமானால் ஈடு செய்ய வேண்டியதில்லை என்றும் வழங்கியுள் ளனர். கலித்தொகைக்குப் புதுக்கோட்டை அரசின் அமைச்சர் அ. சேசையாவும், இலக்கணவிளக்கத்திற்குப் போடி குறுநில மன்னர் திருமலை போடய காமராச பாண்டியரும், சூளாமணிப் பதிப்புக்கு இவர் இளவல் இரங்கூன் சி.வை. இளையதம்பி முதலிய எண்மரும் தொல். எழுத்துக்குப் புதுக்கோட்டை முறைமன்ற நடுவர் ம. அண்ணாமலையும் பிறரும் உதவியுள்ளனர்.

இந்து இதழாசிரியர் க. சுப்பிரமணியரும் மு. வீரராகவரும் 30-31 படிவங்களுக்கு மேற்படாத ஒரு நூலைத் தாள் செலவோடு கூடத் தம் அச்சகத்தில் அச்சிட்டுத் தருவதாகக் கூறிய செய்தியை உரைக்கும் தாமோதரர்"

46

"இவர்கள் முன்மாதிரியைப் பின்பற்றிப் பிற அச்சுக் கூடத் தலைவர்களும் தலைக்கொரு பழைய நூலைத் தத்தம் யந்திர சாலையில் தக்க வித்துவான்களைக் கொண்டு பரிசோதிப்பித்துப் பதிப்பாராயின் எத்தனை நூல் அழியா தொழியும்? அன்றியும் அஃது அருந்தந்திரங்கள் இறவாமல் நிலைபெறுவதற்கு ஆனதோர் பெருந் தந்திரம் ஆகுமன்றே!” என்று நயந்து கூறுகிறார்.

தஞ்சைத் துணை முறைமன்ற நடுவர் கனகசபை என்பார் பழமையான 35 ஏடுகளைத் திரட்டித் தந்தார். பதிப்பு முயற்சிக்குப் பணத்தினும் பழஞ்சுவடியே பெரும் பயனாம் என்பதை உணர்ந்து செய்த செய்கையைப் பாராட்டும் தாமோதரர் "இவற்றை யான் அத்துணைப் பொன் மொகராவாக மதித்து அவர்களுக்கு வந்தனம் செய்கின்றேன்" என்று பாராட்டுகிறார்.

ஏடு பெற்ற வரலாறு, அதனைப் பெறுவதற்கு உதவியவர்கள், பெற்றுத் தந்தவர் ஆகியோர்களைப் பற்றியெல்லாம் விரிவாகக் கூறி நன்றி செலுத்துகின்றார் தாமோதரர். அப்படியே நன்கொடை உதவினோர்களையும் பாராட்டியுரைக்கிறார். அவர்தம் மனத்தில் கிடந்த ஆர்வத்தை நிறைவேற்றவல்ல மூவர் இளம் பருவத்திலேயே இயற்கை எய்தியமையை எண்ணி இரங்குகிறார். அவர்கள் வேதாரணியம் கைலாசநாதர், திருப்பனந்தாள் குமாரசாமிமுனிவர், சீர்காழி கிருட்டிண சாமி என்பார்."எனது தவக்குறையோ தமிழின் துரதிர்ஷ்டமோ