உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளர்த்த தாமோதரனார்

என்று நம்பிக்கை தெரிவிக்கின்றார்.

145

"எவ்வெம் முயற்சிக்கும் துணைக் காரணம் பணம். அதன் குறைவினால் எனது முயற்சி மிகத் தாமசப்பட்டு நடை பெறுகின்றது. லோகோபகாரமாய் யான் கையிட்ட இத்தொழிலைத் தற்கால சர்வகலா சோதனைச் சங்கத்தில் எனக்கு வரும் பரீக்ஷா நிவேதனம் ஒன்றைக் கொண்டே நடத்திவருகின்றேன். அது பிரதிகள் தேடி அப்பப்போ யான் செல்லும் பிரயாணங்களுக்கும் பரிசோதனைச் செலவிற்குமே முன்னோ பின்னோ என்று கட்டி வருகின்றது"

என்று தொல். எழுத்துப் பதிப்புரையிலே எழுதும் சிக்கலான நிலையை அறியின் அவர் துணிந்து இறங்கிய துறையின் இக்கட்டுத் தெளிவாகும்.

உதவி வேண்டல் :

அவர் இந்து இதழ் வாயிலாக உதவிவேண்டி வெளியிட்ட அறிக்கையைக் கலித்தொகைப் பதிப்புரையிலே குறிப்பிடுகிறார்:

"தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையம், அதன் பொருளதிகாரம் நச்சினார்க்கினியம், வீரசோழியம், இறையனார் அகப்பொருள், திருத்தணிகைப்புராணம் என்று இன்னவற்றைப் பல தேசப் பிரதிகள் கொண்டு பரிசோதித்து அச்சிடுவித்தேன். இதனால், எனக்குப் பிரதிகள் விலைபோகாமல் மூவாயிரத்து ஐந்நூறு ரூபா வரையில் திரவிய நஷ்டம் நேரிட்டது. இவ்வாறான நஷ்டத்தைத் தருமசீலரான பிரபுக்கள் நன்கொடை முதலிய சகாயஞ் செய்து பரிகரித் தாலன்றி என் முயற்சியைக் கைவிடும்படி நேரிடுவது கண்டு பரிபவமுற்றுச் சென்ற வருஷம் ஆடிமாதம் ஹிந்து பத்திரவாயிலாக ஓர் அபயம் எழுதி என் குறை நிறையை உலகத்திற்குத் தெரிவித்ததும் அன்றி எனது இஷ்டர்கள் பலர்க்கும் தமிழ்ப் பிரபுக்கள் சிலர்க்கும் அக்கடிதத்தின் பிரதியைப் பிரத்தியேகமாகவும் அனுப்பினேன். அது கண்டு அநுதாபமுற்றோர் சிலரன்றி இலர்."

நன்றிபாராட்டல்:

இந்து இதழ் வழியாக வந்த வேண்டுகையைக் கண்டு உதவியோர் பெயரையும் அவர்கள் வழங்கிய தொகையையும் கலித்தொகைப் பதிப்புரையிலே குறிப்பிடுகின்றார். கொடைஞர் இருபதின்மர் பெயர்களும் அவர்கள் வழங்கிய தொகை உருபா ஆயிரத்து நூறும் இடம் பெற்றுள. மேலும், சிலர் ஒவ்வொரு நூல்