உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

தாம்தாம் பதிப்பிக்க வேண்டும் என்றும், தமக்கே உதவவேண்டும் என்றும் குறிப்பிடாமல் பிறர் பதிப்பிக்கவும், பிறர் பதிப்புக்கு உதவவும் வேண்டும். தாமோதரர் சால்பு, பிறர்க்கு வருதல் அருமையாம்! இச் சால்பை எவ்வளவு பாராட்டினும் தகும்! ஏனெனில் புகழைப் பங்கிட்டுக் கொள்ள ஒப்பும் உண்மையாளர் உலகில் மிக மிக அரியர்!

"திரவிய லாபத்தை எவ்வாற்றானும் கருதி முயன்றிலேன். கைநஷ்டம் வராதிருப்பதொன்றே எனக்குப் போதும். இது வரையில் பதிப்பித்த நூல்களால் எனக்குண்டான நஷ்டம் கொஞ்சமன்று. இவ்வித முயற்சியிற் கையிடுவோர் நஷ்டமுறா திருத்தற் பொருட்டுச் சர்வகலா சாலைப் பருக்ஷையிற்றேறி ஆங்காங்குப் பெரும் உத்தியோகம் வகித்திருப்போர் தத்தம் சொயபாஷையில் அச்சிடப்படும் பூர்வ கிரந்தங்களில் ஒரு பிரதி வாங்குதல் அவர் கடமை என்று எண்ணுகின்றேன்” எனத் தொல். பொருள். பதிப்பிலே வேண்டுகை விடுகிறார் தாமோதரர். இதுவும் தம்பதிப்புக்கு மட்டுமே உரிய வேண்டுகையன்று. தமிழ் மொழிக்கு மட்டுமே உரிய வேண்டுகையுமன்று.தாமோதரரின் பேருள்ள வெளிப்பாடு இது. இவர்க்கென ஏற்பட்ட அல்லல் இல்லையா? இழப்புகள் இல்லையா? ஏடு தேடற் செலவென்ன? ஆய்தல் செலவவென்ன? அச்சீட்டுச் செலவென்ன? இவையெல்லா வற்றாலும் ஏற்பட்ட இழப்புக்குச் செல்வக் குவியலைத் திரட்டி வைத்துக் கொண்டு இச் செல்வத்தை என் செய்வேம் எனத் தவிப்பவரா தாமோதரர்? அதனால் செல்வர்கள் உதவியை நாடினார்! செய்தித்தாள் அறிக்கையும் வெளியிட்டார்.

தொல் பொருள் பதிப்புரையிலே,

"இதனைப் பதிப்பித்ததில் அச்சிற்கும் காகிதத்திற்கும் வந்த செலவினும் பரிசோதனைச் செலவு இருமடங்கிற்கு மேலே சென்ற தாகலானும், இப்பெயர்ப்பட்ட அரிய நூல்களைப் படிக்க விரும்பி வாங்குவார் சிலரே யாதலானும், இதுவித முயற்சியிற் கையிடுவது கைம் முதலுக்கே நஷ்டத்தை விளைவிக்கின்றது. ஆதலால், தமிழ் விருத்தியில் அபிமானமுள்ள பொருட் செல்வர்களால் சிறிது சகாயம் பெற்றாலன்றி இன்னும் இதுபோல அழிகின்ற தசையை அடைந்திருக்கும் அரிய கிரந்தங்களைப் பரிசோதித்துப் பதிப்பித்தலில் ஊக்கஞ் செல்லாது. இதுவரையும் அச்சுமணமும் பெறாத பூர்வ கிரந்தங்களையே தேடிப்பதிப்பிக்கும் நோக்க முடையோற்குக் கல்வியருமை தெரிந்த திரவிய சீலர்கள் கைகொடுப்பார்கள் என்று நம்புகின்றேன்.”