உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளர்த்த தாமோதரனார்

143

சரஸ்வதியைத் தம்பால் வகிக்கப்பெற்ற வித்துவான்களை அவள் மாமி எட்டியும் பார்க்கின்றாள் இல்லை. திருவுடையீர்; நும் கருணை இந்நாள் தவறினால் பின்பு தவம் புரிந்தாலும் ஒருதரம் அழிந்த தமிழ் நூல்களை மீட்டல் அரிது. யானை வாய்ப்பட்ட விளாம்பழத்தைப் பின் இலண்டத்துள் எடுத்துமென்? ஓடன்றோ கிட்டுவது! காலத்தின் வாய்ப்பட்ட ஏடுகளைப் பின் தேடி எடுப்பினும் கம்பையும் நாராசமும் தான் மீரும். அரைக் காசுக்கு அழிந்த கற்பு ஆயிரம் பொன் கொடுத்தாலும் வாராது.

66

சங்கமரீய இய நூல்களுள் சில சில இப்போதுதானும் கிடைப்பது சமுசயம், முப்பால் அப்பாலாய் விட்டது.என் காலத்தில் யான் பார்க்கப்பெற்ற ஐங்குறு நூறு இப்பொழுது தேசங்கள் தோறும் தேடியும் அகப்பட்டிலது. எத்தனையோ திவ்விய மதுர கிரந்தங்கள் காலாந்தரத்தில் ஒன்றன்பின் ஒன்றாய் அழிகின்றன. சீமான்களே! இவ்வாறு இறந்தொழியும் நூல்களில் உங்களுக்குச் சற்றாவது கிருபை பிறக்கவில்லையா? ஆச்சரியம்! ஆச்சரியம்!! அயலான் அழியக் காண்கினும் மனம் தளம்புகின்றதே! தமிழ் மாது நும் தாயல்லவா! இவள் அழிய நமக்கென் என்று வாளா இருக்கின்றீர்களா! தேசாபிமானம் மதாபிமானம் பாஷாபிமானம் என்று இவையில்லாதார் பெருமையும் பெருமையா? தனைத் தயை கூர்ந்து சிந்திப்பீர்களாக!"

என முறையிடுகிறார்! மன்றாடுகிறார்!

ஓரொருவர் ஓரொரு நூலைத் தமது செலவில் தமக்கு இஷ்டமான வித்துவான்களைக் கொண்டு பரிசோதித்து அச்சிடுவிப்பினும் தமிழ்த் தேசத்திற்கு எவ்வளவு பேருபகார மாகும்! எத்தனை நூல்கள் இறவா தொழியும்? எனத் தொல். பொருள். பதிப்புரையிலே இரங்கிக் கெஞ்சுகிறார்.

நாட்டுக்கோட்டை இராமநாதன் என்பார் இரங்கூனில் இருந்து உருபா 50 நன்கொடை அனுப்ப, அதனைத் தொல். சொல். சேனாவரையப் பதிப்பு நன்றி கூறலில் சுட்டி இம் முன்மாதிரியை அனுசரித்து இப்படிப்பட்ட முயற்சியுடையவர்களுக்கும் ஒருவாறு துணைசெய்யும்படி அவர்கள் மனத்தில் எந்நாளும் குடிகொண்டிருக்கும்" நடராசப் பெருமான் அருள் புரியுமாறு வேண்டிக் கொள்கிறார். சூளாமணிக்கு உதவியவர்களைக் குறிப்பிட்டு இவர்கள் முன்மாதிரியைப் பின்பற்றி இன்னும் அநேகர் தத்தமக்கு ஏற்ற வித்துவான்களைக்கொண்டு பற்பல பழைய தமிழ் நூல்களை வெளிப்படுத்தி நிலை நிறுத்தக் கலைமகள் கடாட்சிப் பாளாக" என வேண்டிக் கொள்கிறார்.