உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

பண்பு நலம்:

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்புரையிலே தாமோதரர் மற்றொரு சீரிய கருத்தினை வரைந்துள்ளார். அவர்தம் பதிப்பு நலக் கருத்தும்,தூயவுள்ளமும் ஒருங்கே பளிச்சிட்டுக் காட்டுகிறது அக்கருத்து:

"இலக்கிய இலக்கணங்களில் வல்ல பெரியோர் பதிப் பிலுள்ள குற்றங்களை அடியேனுக்குத் தெரிவிக்கும்படி பல முறையும் பிரார்த்திக்கிறேன். அன்னோர் அறிவிக்கும் திருத்தங் களைத் திரட்டி இன்ன இன்ன வழு, இன்ன இன்ன வித்துவான்களால் உணர்த்தப்பட்டன என்று குறிப்பிட்டுத் தொல்காப்பியப் பதிப்புத் திருத்தம் என்று ஒன்று உடனே அச்சிட்டு வெளியிடக் காத்திருக்கிறேன். ஐம்பது புதுத் திருத்தங் களுக்கு ஒரு பிரதி என் நன்றியறிவிற்கோர் அடையாளமாக அனுப்புவேன். இந்நூல் பிழையற வழங்கச் செய்தல் ஓர் பெரும் லோகோபகாரம் என்று உணர்வாராக" என்பது அது.

தாம் ஈடுபட்டதுபோல் அறிஞர்களும் தமிழ்ப் பழநூல் களைப் பதிப்பித்தலில் ஈடுபட வேண்டும் என்றும், வள்ளன் மையாளர் அதற்கு உதவ வேண்டும் என்றும் கலித்தொகைப் பதிப்புரையில் ஒரு பேரறிக்கை விடுகின்றார் தாமோதரர்! தாமோதரர் தமிழுள்ளம் பள்ளம் பாயும் வெள்ளமெனப் பெருக்கெடுத்துப் பாய்தல் விளக்கமாகின்றது:

“சங்க மரீஇய நூல்களாய் வகுக்கப்பட்ட எட்டுத்தொகை பத்துப்பாடல் பதினெண்கீழ்க்கணக்குள், தலைமைபெற்ற எட்டுத் தொகையுள் இக் கலித்தொகையும் பத்துப்பாடலுள்ளே திருமுருகாற்றுப்படையுமே இப்பொழுது அச்சில் வந்தன. எஞ்சிய பதினாறனையும் பெயர் மாத்திரையானே அறிந்தாற் போதுமா?"

பதினெண் கீழ்க்கணக்குள்தானும் இன்னும் வெளிவராது கிடப்பன உள. இவைகளைத் தங்களால் நன்கு மதிக்கப்பட்ட சில வித்வாம்சர்களைக் கொண்டு பரிசோதிப்பித்து வெளியில் வரச் செய்யத்தக்க சீமான்கள் யாரும் இல்லையா! தமிழின் அருமையுணர்ந்த பெரியோர் மடாதிபதிகள் என்று ன்னோர் இவற்றிற் கடைக்கண் சாத்துமாறு சரஸ்வதியே அநுக்கிரகிப்

பாளாக.

"பழைய சுவடிகள் யாவும் கிலமாய் ஒன்றொன்றாய் அழிந்து போகின்றன. புது ஏடுகள் சேர்த்து அவற்றை எழுதி வைப்பாரும் இலர். துரைத்தனத்தாருக்கு அதன் மேல் இலட்சியம் இல்லை.