உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

நீர்மிசை அலர்த்தும் சீர்வறி தாக

வளமலி உலகில் உளநிறை புலமைக்

கலைக்கதிர் கொடுகருஞ் சிலைக்கிணை கடந்த

என் இதயமும் சிறிதளவு உதயமாம்படி பார்மிசைப் பக்குவிட நெகிழ்த்திய மிக்க சிறப்பினையுடைய,

சன்னை முத்துக் குமாரன் துணைக்கழல் சென்னி நாவொடு சிந்தை திருந்தவைத்து அன்ன மூதறி வாளர் பதந்துதித்து

இந்நிலத்திவ் வுரையின் றியம்புகேன்'

""

எனக் கலித்தொகைப் பதிப்புரை முகப்பில் பரவுகிறார். சூளாமணிப் பதிப்பில்,

"தெள்ளுதமிழ்க் கடல்கடந்து செழியகலைத் துறைப்படிந்து திரிபில் ஞானக்

கொள்ளைகொண்டு நுகர்ந்தமுத்துக் குமாரகவி

மேகமிதைக் கொடிச்சுன் னாக

வள்ளலென துள்ளமதி கொள்ளநறை

விள்ளுதமிழ் மணஞ்சற் றேறி

வெள்ளறிவின் முடைநாற்றம் வீவித்தான் விரைமலர்த்தாள் மலைவன் மாதோ"

என இசைக்கிறார்.

“கற்றறி வில்லாக் கடையனேன் தனக்கு நற்றமிழ் கொளுத்திய நாவலன் சுன்னை முத்துக் குமார வித்தகன் அடியினை சித்தத்து இருத்தி.”

என்று தொல்.பொருள். பதிப்பிலும்,

66

சங்க மங்களத் தமிழ்முத்துக் குமரன்தண் மலர்ப்பா தங்கள் வங்கமாத் தமிழ்க்கட விடைப்படி குவனே”

என்று இலக்கண விளக்கப் பதிப்பிலும்,

66

'முத்துக்குமார நற்கவி ராசனை வழுத்தி”

என்று தொல் எழுத்துப் பதிப்பிலும் பலபடப் பகர்கிறார்.

இவர்தம் பதிப்பின் அருமுயற்சியும் பெரும்பாடும் புலமை யாளர்க்குப் புரியாமல் போய்விடவில்லை. நெஞ்சாரப் பாராட்டி