உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளர்த்த தாமோதரனார்

149

நேயங்காட்டுவாரும் இருந்தனர். இதற்கு வீரசோழியப் பதிப்புக்கு வாய்த்த சிறப்புக் கவிகளே சாலும். தஞ்சாவூர் சதாவதானம் சுப்பிரமணியனார், புரசை அட்டாவதானம் சபாபதியார், கோப்பாய் வித்துவான் சபாபதியார், துரைத்தன வித்தியாசாலைத் தமிழ்ப் புலவர் தொழுவூர் வேலாயுதனார், திரிசிரபுரம் சோடாசாவதானம் சுப்பராயர், சொர்ண நாதபுரம் துவாதிரிம் சதாவதானம் இராமசாமியார், சுன்னாகம் அ. குமாரசாமியார் என்னும் எழுவர் சிறப்புக் கவி இயற்றியுள்ளனர். முதல் பாட்டே ஏட்டின் நிலையையும் பதிப்பின் சிறப்பையும் அருமையாக விளக்குகின்றது.

"சொல்துளைத்த நாவலர்கள் எழுதிவைத்த முதுவீர சோழி யத்தைச்

செல்துளைத்த புள்ளியன்றி மெய்ப்புள்ளி விரவாத செல்நாள் ஏட்டில்

பல்துளைத்து வண்டுமண லுழுதவரி

யெழுத்தெனக்கொள் பரிசின் ஆய்ந்து

கல்துளைத்த எழுத்தாஅச் சிட்டனன்தா

மோதரனாம் கலைவல் லோனே"

சொல்லாய்வு வல்ல புலவர்கள் எழுதிய பழைய ஏடு; அதில் மெய்யெழுத்திற்குப் புள்ளியிருப்பதில்லை; ஆனால் 'செல்'லும் பூச்சியும் துளைத்த புள்ளிகள் ஒன்றிரண்டல்ல, பலவுண்டு; நீர்ப்பூச்சி நிலத்தில் போட்ட கோடென வரிகளும் உண்டு; அத்தகைய எழுத்தையும் படித்து ஆய்ந்து கல்லில் எழுதிய எழுத்துப் போல நிலைக்குமாறு அச்சிட்டுவிட்டான் தாமோதரன்; அவன் கலைக்கோமான்தான்! என்னும் பொருள் நயம் சொல் நயமிக்க இப்பாடல் தாமோதரனார் பதிப்புப் பணி நலத்தை நன்கு விளக்கும்! நூற்றுப்பத்து ஆண்டுகளுக்கு முற்பட்ட செயலன்றோ 51. (1881)

தாமோதரர் ஏட்டை அச்சாக்கிய அருமை உவமை வாயிலாகப் பாடப்படுகின்றது. ஒரு கருத்தையே மும்முறையில் முச்செய்தியால் கூறுதல் கலித்தாழிசை மரபு. ஆனால், வீரசோழியச் சிறப்புக் கவிகளோ தனித் தனி வேறு வேறு புலவர்கள் பாடிய இரட்டைத் தாழிசைகள் என விளங்குகின்றன.

கல்லாகக் கிடந்த அகலிகையை நல்லாளாக எழுப்பிய

இராமன்கதை,