உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

மாயையினின்று உலகம் வந்தது என்னும் மெய்ப் பொருட்

கொள்கை,

முதலை வாய்ப்புக்க பாலனைச் சுந்தரர் மீளக் கொண்டு வந்த கதை,

இறந்த பூம்பாவை என்பைக் கொண்டு பெண்ணுருவாக்கிய ஞானசம்பந்தர் கதை,

பரற்கல்லைப் பைம் பொன்னாக்கும் வித்தை,

இந்திரசாலம் என்று சொல்லப்படும் கண்கட்டு வித்தை,

இன்னவற்றுக்கு இணையாகவும் மேம்பட்டும் நிற்பது இவர் பதிப்பு என்கின்றனர். "தாமோதரர்க்கு எவர் தாமோதரர்?" என்று இவர் இயற்பெயர் அமைந்த வாற்றைச் சிறப்பிக்கிறார் தொழுவூரார். பின்னாளில் பரிதிமாற் கலைஞர், "தாமோதரம் பிள்ளை சால்பெடுத்துச் சாற்ற எவர் தாமோ தரம்" என்று பாடுதற்கு முற்பட்டது இது!

ஈழகேசரி உரை:

இவர்தம் தொல்காப்பியப் பதிப்பைப் பின்னுக்குத் தள்ளி ஒருவர் எழுத அதற்கு உண்மையுரைத்து மறுக்கு முகத்தான், "இந்தப் பூ மண்டலத்திலே தமிழ்நாட்டிலே தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையத்தைத் தமிழ்நாட்டிலே தமக்கிணையில்லாத ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்களைக் கொண்டு பதிப்பித்து முதன்முதல் அச்சுவாகனத்தில் ஆரோகணிப் பித்தவர்கள் தமிழ் மகனார் சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்களே! ஒரு மயிர் நுனியைக் கோடாநு கோடி கூறிட்டு அக்கூறுகளில் ஒரு கூறாகிய ஒரு மயிர் நுனி சந்தேகமும் இதில் இல்லையே இல்லை" என்று 'தொல்காப்பியப்பதிப்பு' என்னும் தலைப்பில் பண்டிதர் சி. கணபதியார் வரைகிறார் (ஈழகேசரி. 17.9.50)

தாமோதரர் தொல்காப்பியப் பதிப்பில் தலையிட்ட நிைையயும் அக்காலத்தில் அவர் பணிக்குக் கிடைத்த பரிசையும் அதே கட்டுரையில் வரைந்துள்ளார் :

"மகான் மகாலிங்கையர் அவர்கள் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியம் பதிப்பித்து இருபது ஆண்டுகள் கழிந்தும், ஏனைய அதிகாரங்கள் தமிழுக்கு இன்றியமையாதனவும் தலைசிறந்தனவுமாம் என்பதை அறிந்து வைத்தும் தமிழ்நாட்டுப் புலவர்கள் அவற்றை அச்சிற் பதிப்பிக்க முன்வரவில்லை. அவர்கள்