உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளர்த்த தாமோதரனார்

155

மூன்று சிறுத்தரும் நூல்களை என்றும், இன்னிலை சொல் என்றது இன்னிலை இன்சொல் என்னும் பெயரிய இரண்டு நூல்களின் பெயரை என்றும் உத்தேசிக்கிறேன். அன்றேல் ஐந்திணை அகப்பொருட் டுறைத்தாய் ஐம்பது செய்யுளான் மாறன் பொறையனார் இயற்றியது ஓர் நூலாக இவர்க்குக் கீழ்க் கணக்குத் தொகை பதினெட்டாய தெவ்வாறோ? இவ்விடர் நோக்கிப் போலும் சிலர் ஐந்திணையை ஐந்தொகை என்று பாடம் ஓதுவர். அன்னோர் நெடுந் தொகையொன்றொழிய வேறு தொகை யின்மையிற் சட்டி சுட்டதென்று நெருப்பில் பாய்ந்த கள்வனார் போலப் பின்னர் எட்டுத் தொகைக்கு நூல் காணாது பேரிடர்ப் படுவர். இன்னிலைய காஞ்சியுடன் ஏலாதி என்பவே என்றும் பாடமுண்டு. அதனால் இன்னும் இரண்டு குறைவதன்றிக் கணக்குச் சரிபெறாது.

இவ்வாறு கொள்ளாது சிலர் கோவை முப்பால்களை வாதபுரீசராகிய மாணிக்கவாசக சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய திருச்சிற்றம்பலக்கோவையாரும் சங்கத் தாரைப் பங்கப் படுத்தி அழித்துவிட்ட தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனாரது பொய்யா மொழித் திருக்குறளுமென்று மயங்கித் தடுமாறுப. பெயர் படைத்த வித்துவான்களுள்ளும் சிலர் இவ்வாறு மயங்கினது நம்போலியரை மிக மயக்குகின்றது. இவ்விரண்டும் நமது தமிழ் வேதமென்றாவது சிந்தித்தாரில்லை. திருச்சிற்றம்பல முடையார் கையெழுத்தா கீழ்க்கணக்கின் கீழகப்பட்டது? இதனை நிராகரிக்க அயற்சாட்சியும் வேண்டுமா? பன்னிரண்டு திருமுறையையும் ஒருங்கு சேர்த்து முப்பதாக்கி விட்டாரில்லை! மேலும் 'நாலடி நான்மணி' என்றற்றொடக்கத்துச் செய்யுள் யாரது? யார் காலத்தது? யாண்டையது? சங்கத்தார் காலத்துச் சங்கத் திருமுன்னர்ச் சங்கப் புலவருள் ஒருவராற் சொல்லப் பட்டதென்பது உண்மையாயின், நாயனார் திருக்குறளின் பின் சங்கம் எங்கே இருந்தது? இருப்பினன்றோ குறளுங் கூட்டிக் கூறப்படும். நாற்பத்தொன்ப தின்மர் புலவருங்கூடி மனத்தாலும் வாயாலும் வாழ்த்திய மாலையின் சாரம் அதனைத் தமது சிறுநூல்களோடு ஒக்கவைத்தற் கருத்தினை உடையதா?" என்கிறார்.

பின்னே வந்த இலக்கண விளக்கப் பதிப்புரையில், ம.ள.ளஸ்ரீ கொ.ஸ்ரீநிவாசராக வாசாரியாரவர்கள் தாம் எழுதிய நாலடியார் நூல் வரலாற்றில், 'நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப் பால்கடுகம் கோவை பழமொழி என்பவற்றுள் ஐந்திணை அகப் பொருட்டுறைத்தாய் ஐம்பது செய்யுளான் மாறன் பொறையனார்