உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

இயற்றியது ஓர் நூலாகக் கீழ்க்கணக்குத் தொகை பதினெட்டாய் தெவ்வாறோ? என யான் கொண்ட கொள்கை மாற ஐந்திணை' என்றது திணைகளைப் பற்றிச் சொல்லும் ஐந்து நூல்கள் எனக் கூறி ஐந்திணை ஐம்பது ஐந்திணை எழுபது திணைமொழி ஐம்பது திணைமாலை நூற்றைம்பது இந்நான்கும் அவ்வைந்திணையைச் சேர்ந்தன என்றும் இவை போன்றது இன்னும் ஒன்று இருத்தல் வேண்டும் என்றும் சொற்றனர். கலித்தொகைப் பதிப்புரை எழுதிய பின்னர் மேற்கண்ட நான்கு நூல்கள் எனக்கும் அகப்பட்டன. ஐந்திணை விஷயத்தில் யான் கூறிய கூற்றுச் சரியன்றென்று ஒத்துக் கொள்வதுமன்றி, ஆசாரியாரவர் கட்கு என் வந்தனமும் கூறுகின்றேன்.பிறர் சிலரொப்பக் கோவையைத் திருச்சிற்றம் பலக்கோவை என்று கொள்ளாது யான் சொல்லியது போல ஆசாரக்கோவை என்று வர்கள் உரையிட்டது சாலவும் பொருத்த முடைத்தேயாம்.

முப்பால் தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனாரது பொய்யா மொழித் தமிழ் வேதமாகிய திருக்குறளல்ல வென்பதற்கு யான் கூறிய நியாயங்களை முற்றச் சீர்தூக்கி ஆராயாது, ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலுமிரண்டும் சொல்லுக்குறுதி என்னும் பிற்றைநாண் மொழியைச் சங்கத்தார் காலத்து முதுமொழிபோல் கொண்டது ஆசாரியார்பால் ஒரு தவறென்றே இன்னும் வற்புறுத்துகின்றேன். கோவை திருக் கோவையாராகாது ஆசாரக் கோவை யாயினாற் போல முப்பாலும் நாயனார் தமிழ் வேதமாகாது நமது கைக்கு இன்னும் அகப்படாத பின்னொரு சிறு நூலே யாதல் வேண்டுமென்பது என் துணிவுமாத்திரமன்று. இது விஷயத்தில் யான் கண்டுபேசிய பல மடாதிபதிகள் வித்துவான் கட்கும் இஃதொப்பென் றறிக.

இஃதெழுதிய பின்னர், ஸ்ரீ திரு. த. கனகசுந்தரம் பிள்ளை யவர்கள் தமக்கு அகப்பட்டதோர் மிகப்பழைய கீழ்க்கணக்குச் சுவடியில் நாலடி நான்மணி என்னும் செய்யுள் அதிகம் சிதைவு பட்டுக் கிடப்பதில், ஐந்திணை என்பதற்கு ஐந்திணை ஐம்பது ஐந்திணை எழுபது திணை மொழி ஐம்பது திணைமாலை நூற்றைம்பது என்னும் நான்குமே உரையிற் குறிக்கப்பட்டிருக் கின்றன என்றும், முப்பால் என்பதன் உரை நாயனார் திருக்குறளை ஒருவாற்றானும் சுட்டாது முப்பால் என்றே கூறப்பட்டிருக்கிற தென்றும் கைந்நிலை என்பது அப்பெயரான் உரையோடு உள்ளதோர் தனி நூலாகக் கண்டிருக்கிற தென்றும் எழுதியறி வித்தனர். இஃது என் கூற்றை நன்கு வற்புறுத்துகின்றது. இதனால்,