உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளர்த்த தாமோதரனார்

157

நானாற்பதைந் திணை என்பதில் நாலென்னும் அடையை நாற்பது ஐந்திணை என்னும் இரண்டனொடும் ஒட்டி நானாற்பது, நாலைந்திணை என்று கோடல் வேண்டுமென்றும் ஐந்திணை யான் கூறியவாறு ஒரு நூலுமன்று, ஆசாரியாரவர்கள் கூறுமாறு ஐந்து நூலுமன்று; ஐந்திணைப் பொருள் உணர்த்திய நான்கு நூல்கள் என்று கொள்ளத் தக்க தென்றும் சொல்ல ஏதுவாகின்றது. அங்ஙனமாயின் முப்பாலென்றது ஒரு நூலாகவும்; இந்நிலை சொல் என்றது இன்னிலை இன்சொல் என இரண்டு நூல்களாகாது காஞ்சிக்கு விசேஷணமாகவும் கைந்நிலை என்றது வேறொரு தனிநூலாகவும் கொள்ளல் தகும். இவ்வாறு கொள்ளிற் ‘கைந்நிலை யோடாங்கீழ்க் கணக்கு' என்று ஈற்றடிப் பாடம் திரிதல் வேண்டும்.

எட்டுத்தொகை பதினெண் கீழ்க்கணக்குகளுள் இன்னும் அச்சிற் தோற்றாதன தேடி வெளிப்படுத்தும் நோக்கமாகச் சில நாட்களுள் மதுரை, திருநெல்வேலி, கோயமுத்தூர் முதலிய தேசங்களுக்கு ஓர் யாத்திரை செய்ய உத்தேசித்திருக்கிறேன். அவ்வாறு போய்த் திரும்பியபின் இது விஷயத்தைப் பற்றி மறுபடியும் எழுதுவேன்' என எழுதுகின்றார். இவ்வுரைகள் எழுதப் பட்ட காலம் 1887, 1889 ஆம் ஆண்டுகளாம்.

மற்றை நூல்களினும் 'கைந்நிலையா, இன்னிலையா' என்னும் சிக்கலே வலுத்திருந்தது. இன்னிலை ஏட்டுச் சுவடி ஒன்று 1915 ஆம் ஆண்டில் த. மு. சொர்ணம் என்பாரால் கண்டுபிடிக்கப் பட்டது. அதனை வ.உ. சிதம்பரனார் அச்சிட்டார்.

1931 இல் கைந்நிலை ஏட்டுச் சுவடி கிடைத்தது. அதனை அச்சிட்டவர் இ.வை.அனந்தராமர் என்பார். இரண்டும் கீழ்க்கணக்கைச் சேர்ந்தன என்றால் பதினெட்டு என்னும் எண் பொருந்தாது. இவற்றுள் ஒன்றே கீழ்க்கணக்கைச் சேர்ந்ததெனின் ஒன்றை விலக்க வேண்டுமே! எதை விலக்குவது?

இன்னிலை மதுரையாசிரியர் என்பவர் தொகுத்தார் என்றும், மதுரையாசிரியர் என்பார் நல்லந்துவனாரும் மாறனாருமே என்றும், அவருள் எவர் தொகுத்தார் என்பது தெரியவில்லை என்றும், இதற்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்றும் வ.உ.சி குறிப்பிடுகிறார். ஆதலால்,இந்நூல் சங்க காலத்தது எனக் கொண்டார் என்றும் இதுவே கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று என்று அவர் கொண்டார் என்றும் விளங்கும்.

செல்வக் கேசவராயர் 1893 இல் வெளியிட்ட ஆசாரக் கோவையில், இதுவரையில் கிடைக்கப் பெற்றுள்ள இலக்கண