உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

இலக்கிய உரைகளிலும் கைந்நிலைச் செய்யுள் மேற்கோளாக வழங்கப்பட்டுள்ள தாகவும் எவர்க்கும் கட்புலனாயிற்றில்லை. ஆகவே, கைந்நிலையைக் கையில் நிலைபெறக் காணும் தனையும் உறுதி கூறலாகாது” என்று எழுதினார்.

பின்னே ஆய்வாளர்களால் இன்னிலை போலி நூல் என்றும், கைந்நிலையே கிழ்க்கணக்குள் ஒன்றாகிய நூல் என்றும் உறுதி செய்யப்பட்டன. ஆனால், இச் சிக்கல்கள் எல்லாம் தோன்றுவதற்கு முன்னரே 1849 இல் வேம்பத்தூர் முத்து வேங்கட சுப்பபாரதியார் என்பார் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இவை என்பதைப் பிரபந்த தீபிகை என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். அது அக்காலத்தில் அச்சேறாமையால் ஆய்வுச் சிக்கல் தீர்க்க இயலாமல் தடுமாறி நின்றது. ஆய்வில் கண்டமுடிபும், அதன் செய்தியும் ஒத்திருத்தல் அப்பதிப்பு வெளிவந்த பின்னர் உறுதியாயிற்று. அப்பாடல்:

ஈரொன் பதின்கீழ்க் கணக்கினுட் படும்வகை இயம்பு நாலடி நானூறும்

இன்னாமை நாற்பது நான்மணிக் கடிகைசதம் இனிய நாற்பான் காரதே

ஆருகள வழிநாற்ப தைந்திணையு மைம்பதும்

ஐந்துட னிருபானுமாம்

அலகிலா சாரக்கோ வைசதம் திரிகடுகம்

ஐயிரு பதாகு மென்பர்

சீருறும் பழமொழிகள் நானூறு நூறதாம்

சிறுபஞ்ச மூலம் நூறு

சேர்முது மொழிக்காஞ்சி யேலாதி எண்பதாம்

சிறுகைந் நிலையறு பதாகும்

வாரிதிணை மாலைநூற் றைம்பதாம் திணைமொழி

வழுத்தைம்பதாம் வள்ளுவ

மாலையீ ரொன்பதாய்ச் சாற்று பிரபந்தம்

வழுத்துவார்கள்புல வோர்களே.

நூல்களும் கிடைத்தன. நூல் வரிசை பற்றிய பாட்டும் கிடைத்தது. உண்மை தெளிவாயிற்று. கருவிகள் இல்லாப் பொழுதில் எவ்வெவ்வாறெல்லாம் ஆய்வுச் சிக்கல்கள் நேர்கின்றன என்றும் எத்தகு பேரறிஞர்களையும் இடர்க்கு ஆளாக்குகின்றன என்றும் இப்பதினெண்கீழ்க்கணக்கு நூலெண்ணிக்கை ஆய்வும் நூலாய்வும்