உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளர்த்த தாமோதரனார்

159

வெளிப்படுத்துகின்றன. கருவி நூல்கள் வெளிப்படாக் காலத்துப் பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்தலை மேற்கொண்டார் பாடும் எத்தகைத்து என்பதை விளக்க வேறுசான்று வேண்டுவதில்லை. இ. இலக்கண விளக்கச் சூறாவளி

இலக்கண விளக்கச் சூறாவளி என்பது சிவஞான முனிவரர் இயற்றிய நூல். இலக்கண விளக்கத்தில் உள்ளதாகப் பல குற்றங் குறைகளைக் கூறுநூல். இலக்கண விளக்கம் அச்சேறியிருந்தால் 'சூறாவளி மாறாக மோதினும்' ஒன்றும் செய்யாது என்பதைக் கலித்தொகைப் பதிப்புரையிலே காட்டினார் தாமோதரர்.

இலக்கண விளக்கப் பதிப்புரையிலே சூறாவளியின் மாறாந்தகைமையை விரித்துரைத்தார். இலக்கண விளக்கச் சூறாவளி என்பது அநியாய கண்டனம் என்பது தாமோதரர் முடிபு. அதனால் முனிவரர் சிறப்பையும் புலமையையும் குறைத்து மதிப்பிட்டாரல்லர். 'யோகீஸ் வரரது பேரறிவு இமாசலம் ஒப்பது; எளியேன் சிற்றறிவு அதன்முன் ஒரு பூதூளி போல்வது' என்றார். அவர், தப்பை ஒப்பு என்று தாபிக்கவும் ஒப்பைத் தப்பு என்று வாதிக்கவும் வல்லர் என்பதை இராமாயண நாந்திச் செய்யுளாகிய நாடிய பொருள் கூடும் என்பதன் குற்றங்களைக் கூறி அக்குற்றங்கள் குற்றங்கள் ஆகாமையை நிலைநாட்டிய இராமாயண சங்கோத்தர விருத்தியைக் காட்டி மேலாய்வைத் தொடர்கிறார்.

சிவஞானமுனிவர் தெரிவித்த குற்றங்கள் எத்தகையன என்பதற்கு ஐந்து எடுத்துக்காட்டுகளைக் காட்டுகிறார் தாமோதரர்; அவை வருமாறு:

1. "முன்னர்ப் பாயிரத்தை வைத்து இது பாயிரமென்று உரைத்துப் பின்னர் அது கேட்ட மாணாக்கர்க்கு நூலுரைப்பான் தொடங்கினார். இப்பாயிரம் உரைக்க வேண்டுவ தென்னை என்னுங் கடா நிகழ்தற்கு டனுள் தாயவழி, இவ்விவ் வேதுக்களான் முன்னர்ப் பாயிரம் உரைக்கவேண்டும் என்று இறுத்தல் அமையும். அவ்வாறோர் இயைபு மின்றித் திருவிளங்கிய மாநகரம் முதலாக எடுத்துரைக்கும் உத்தரம் செப்பு வழுவும் மற்றொன்று விரித்தலுமாய் முடியுமென்க என்றார். வலம்புரி முத்திற் குலம் புரி பிறப்பும் என்று தலையிட்ட ஆத்திரையன் பேராசிரியன் எந்தப் பாயிரத்தை முன்னர் வைத்து இது பாயிர மென்று உரைத்துப் போந்தனன்? ஆண்டு யாண்டையோ கடா நிகழ்ந்ததும், விடையிறுத்ததும் அமையப்பெற்றது?