உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

முகவுரை பதிகம்' என்றற் றொடக்கத்துப் பொதுப் பாயிர முதலியன கூறிய நன்னூலார் 'மாடக்குச் சித்திரமும்' என ஈற்றிலே கூறியதனை இந்நூலார் முதலே எடுத்துரைத்ததுதானா ஒரு தவறாயிற்று? இது குற்றமாயின் நன்னூலாரும், 'முகவுரை பதிகம்' என்னும் சூத்திரம் கூறுவதற்கு முன்னர்த் தம் பாயிரத்தை வைத்து இஃது யாது? இதன் பெயரென்னை? என்று கடா நிகழ்தற்கு இடனாய வழியன்றோ அச்சூத்திரம் செய்தல் வேண்டும். அவ்வாறன்றி, முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம், புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம் எனச் சொற்றது செப்பு வழுவும் மற்றொன்று விரித்தலுமாகுமே. இதனைக் குற்றமென்று தெரிக்கப் புகுந்ததே குற்றமாம் என்றொழிக.

2. 'அவயவமாகிய பாயிரத்துள் அவயவியாகிய நூல் அடங்காது என்றார், அவற்றியல்பு உணராமையின்' என்றனர். இதற்கு விடை இன்னும் நூனுதல் பொருளைத் தன்னகத் தடக்கி என்பதனைத் தழீஇயி னாராகலின், நூலியல்பு பாயிரத்துள் அடங்கா தென்றல் அவர்க்குங் கருத்தன்றென மறுக்க என்னும் அவரது சொந்த வாய்மொழியேயாமெனக் கூறுக. நூல் குணியும் நூலியல்பு குணமுமாகலின் நூல்வேறு நூலியல்பு வேறென்றொழிக. ஆதலாற் பல அவயவங்களை உடையதோர் அவயவி அவற் றொன்றில் அடங்கா தாகுதல் பொருத்தமுடைத் தென்றும் அடங்கும் என்பார் கூற்றிற்குப் பொருள் வேறென்றும் கூறி விடுக்க.

3. "எழுத்ததிகாரம் என்புழி அதிகாரம் முறைமை என்றார். அதிகாரம் என்னும் வடசொற்கு அது பொருளன்மை தொல்காப்பிய விருத்தியிற் கூறிய வாற்றான் அறிக" எனச் சொற்றனர். இதற்கு விடை அதிகாரம் முறைமை எனவே உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர் முதலியோர் கொண்டனரென்க. மேலும், இப்பொருள் வடமொழியிலும் உண்மை சமஸ்கிருத அகராதிகளிற் கூறிக்கிடத்தலான் அறிக.

4. 'மலைமக ளொருபான் மணந்துல களித்த தலைவனை வணங்கிச் சாற்றுவன் எழுத்தே' என்னும் எழுத்ததிகாரத் தற்சிறப்புப் பாயிரத்தில் நான்கு குற்றம் பாரித்து, முதலாவது மலைமகள் என்பது மலையும் மகளெனவும் அமங்கலப் பொருள் தந்து தொகையார் பொருள் பலவாய்த் தோன்றலின் மலை தன் மங்கலப் பயன் குறித்து வாராமை அறிக என்றார். நன்னூலார் எடுத்துண்ட பூமலி என்பது இலைநிறைந்த என்றும் இடம் அகன்ற என்றும் பொருள் தரத்தக்கதாதலால் தொகையார்