உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளர்த்த தாமோதரனார்

161

பொருள் பலவாய்த் தோன்ற இடமில்லையா? 'நீடாழியுலகம்’ என்று மங்கலம் வகுத்த வில்லிபுத்தூராழ்வாரை அது ‘நீள் தாழி' எனவும் பகுக்கக் கிடந்ததென்று குற்றப்படுத்தல் பொருந்துமா? அன்றியுந் தாமே ஒருகால் உவந்ததோர் மங்கல மொழியைப் பிறர் கொண்டக்கால் குற்றமென்றது பேரற்புதமே. மேலும், தம் மரபினோர் அனைவருக்கும் அங்கீகாரமான சிவதருமோத்திரத்தில், "மலைக்குமகள் பெற்ற மகனைக் கயமுகத்தானை மனத்தெழுதியான் அலற்பிணி பிறப்பற வணுக்களை

யகத்திய முனிக்கருளினான்

உலப்பிற் கருணைக் கடலுருத்

திரனுருத் தனிலுதித்தகுமரன்

இலக்குமி யலைக்கலியினைக்

கவுமுரெப்பலுவ கிட்ட முறவே'

""

என மறைஞானசம்பந்த நாயனார் எடுத்தாண்ட மங்கல மொழியை அமங்கலப்படுத்துதல் தன் தாயை வேசி என்று ஏசுதல் போலும்!

இரண்டாவது, மணந்து என்றதும் ஒரு குற்றம். என்னை! இஃது ஈண்டு இந்நூல் நின்று நிலவுதல் வேண்டி என்றார்க்கு' மறுதலையாகப் பொருளதிகாரத்தில் உமையுரு வுருமடுத் தென்றது இந்நூல் நின்று நிலவாது இறுதல் வேண்டி எனப் பொருள் தருதலின் என்றார். ஏனையவற்றிற்கும் ஏற்குமாறு பொருள் விரித்துரைக்க' என்று ஆசிரியர் கூறினாராக இவரை ஏலாவாறு பொருள் கொள்ளச் சொன்னது யாரோ?

மூன்றாவது, உறுபொருள் முதலிய எல்லாவற்றிற்கும் உரிய வேந்தனை உலகு பொருட்கு உரிய வேந்தன் என்றல் அவன் இறைமைக்கு ஏலாதவாறுபோல ஐந்தொழிற்கும் உரிய தலைவனை உலகளித்த தலைவன் என்பது தலையன்மையின் உலகளித்த தலைவன் என்றது குற்றம் என்றார். எழுத்ததிகாரத்தில் 'உலகளித்த தலைவன்' எனவும், சொல்லதிகாரத்தில் 'உலகு புரந்தருளும் அமைவன்' எனவும், பொருளதிகாரத்தில் 'உலகினைப் பொழிக்கும் இமையவன்' எனவும் ஆசிரியர் இறைவன் முத்தொழிலும் கூறியே புகுந்தாராகலின் ஈண்டுப்பட்ட குற்ற மென்னோ? ஆன்றோர் ஆங்காங்குச் சிறிய கடவுள் வணக்கத்திற் கடவுளின் தலைமை யனைத்தும் ஒருங்கு சொல்லாது இரண்டொரு குண மாத்திரையே விதந்து தலைமை கூறுவது பெருவழக்கேயாம். முனிவரர் இஃது