உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

உணராதவரா? இதனாற் குற்றமே தெரிவார் குறுமாமுனி, சொற்ற பாவினும் ஓர் குறை சொல்லுவர் என்பதற்குத் தம்மை இலக்கிய மாக்கினாரன்றோ!

நான்காவது, வணங்குதல் சிறப்பு வினையாவதல்லது பொதுவினை யாகாமையின் வணங்கி என்பது குற்றம் என்றனர். 'மனமொழி மெய்களின் வணங்குது மகிழ்ந்தே' என்புழி ஒப்புமை பற்றிக் கூறியதேயாம்' எனத் தாமே கூறும் இவர், மனத்தாற் றுணிவு தோன்ற நினைத்தலும், மொழியாற் பணிவு தோன்ற வாழ்த்தலும் தலையால் தணிவு தோன்ற இறைஞ்சலும் அடங்கப் பொதுப்பட வணங்கி என்று கூறிய ஆசிரியர்மேற் குற்றஞ் சொல்வதென்னை? சிருஷ்டியும் திதியும் சங்காரத்தில் ஒடுங்குதலாற் சங்காரத்திற்கு முதன்மை கூறுஞ் சுத்த சைவசித்தாந்த சாகரமாகிய யோகீஸ்வரர், நினைத்தலும் துதித்தலும் சேர்ந்து அந்தர்ப்பித்து நடைபெறும் வணக்கத்திற்கு முதன்மை கொடுப்பதே முறையாகும். வில்வணக்கம் தீது குறிப்பது போலச் சொல்வணக்கம் நன்மை குறிக்குமே. ஆதியில் வளைதற் பொருளிற் பிறந்த வணக்கம் ஒப்புமையால் இப்போது மனம் வாக்குக் காயம் மூன்றற்கும் செல்லுமென்று கொள்க.

5. எண்பெயர் முறை பிறப்பு என்னும் சூத்திரத்தில் எண்ணுதற்கும் பெயர் கருவியாதலின் அதனை முற்கூறாதது முறையன்று. எண்ணும் முறையும் போல்வனவற்றால் ஒரு பயனின்மையின், அவற்றை வகையுட் சேர்த்துக் கருவி செய்தல் பயனில் கூற்றாமாற்றிக. போலியெழுத்தென ஒன்றில்லை என்பது தொல்காப்பிய முதற் சூத்திர விருத்தியுட் காண்க என்று மூன்று குற்றமேற்றினர். இஃது இலக்கண விளக்கச் சூறாவளி யன்று. நன்னூற் கருப்பைப் படையோடு சார்தற் பால தென்று விடுக்க என்கிறார்.

சிவஞான முனிவரர் வரலாறு எழுதிய தமிழ்க் கா.சு (சுப்பிரமணியனார்) இலக்கண விளக்கை அணைக்கும் சூறைக்காற்று என்னும் பெயரால் எழுதப்பட்ட கண்டன நூல் என்கிறார். குற்றம் என்று பாராட்டத் தகாதவற்றையும் குற்றமாகக் கூறுதல் வழக்கமாய் இருந்தது என்றும் கூறுகிறார். மலைமகள் என்பதில் பொருள் தெளிவாய் அமைந்திருக்கவும் அதனை மலையுமகள் என்று பொருள்படக் கூடுமெனக் கண்டித்தல் முற்கால வழக்கொடு பட்டதன்று என்று நயமாக மறுக்கிறார். திருவாவடு துறைத் திருமடத்தைச் சார்ந்த ஈசான தேசிகர் இயற்றிய இலக்கணக் கொத்தில் மறுக்கப்படுவன பல இருந்தும் குறிப்பாகத்