உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

அகத்தியரால் நெடுங்கணக்கு ஏற்பட்டது முதல் அகத்தியம் நிறைவேறியது வரைக்கும் சென்ற காலம் அக்ஷர காலம்.

தொல்காப்பியன் அதங்கோட்டாசான் முதலியோர் அகத்தியரிடம் கற்றுத் தத்தம் பெயரால் இலக்கணம் செய்தது இலக்கணக் காலம்.

லக்கண

மதுரைச் சங்கத்தார் காலம் சமுதாயகாலம். சங்க அழிவுக்குப் பிற்பட்டது அநாதர காலம். அதனைப் புத்தர்காலம் எனினும் பொருந்தும். தமிழில் மிக அருமையான இலக்கிய கலைஞான நூல்கள் செய்யப்பட்ட அடுத்த காலம் சமணகாலம். அது தாயிறந்து பெண்ணுக்கோர் சற்குண நிறைந்த சிற்றாத்தாள் வாய்த்தது போலும். அப்பால் முன்பின் எண்ணூறு வருஷ காலம் இதிகாச காலம். அப்பால் தற்காலத்து நிகழும் ஆதீனகாலம். இது சந்தான குரவர் காலத்தையும் சேர்த்து இற்றைக்கு எழுநூறு வருஷத்தின் முன் தொடங்கியது. இவற்றைத் தனித்தனி விரித்துரைக்கிறார்.

ஆங்கில ஆட்சிக்காலத்தில் ஒரு சிறிதாகவும், ஓரொரு நூலில் சிறு பகுதியாகவும் கற்பிக்கப்படும் தமிழ் குறித்து எழுதி அப் பகுதியை நிறைக்கிறார்.

நீந்துதற் றொழிலைக் கற்பிப்பான் ஓர் நீராசிரியன் கற்பானை ஏரி நதி கிணறு குளங்களில் இறங்க விடாது குடத்தில் த்ண்ணீர் மொண்டு சிறு குழியில் விட்டுக் கால் மறையாத் தண்ணீரில் மாரடிக்க விட்டாற் போலக், கடனீரெனில் உடல் கசியும் உப்புப் பூக்கும், குளநீரெனிற் சளிபிடிக்கும், தலைநோவுண்டாம், யாற்று நீரெனிற் சர்ப்பம் தீண்டும் முதலை பிடிக்கும் என்று ஓரோர் நூலுக்கு ஓரோர் குற்றம் சாற்றி ஒன்றிலும் இறங்க விடாது ஒரு நூலில் ஒரு குடமும் இன்னொரு நூலிற் பின்னொரு குடமுமாக அள்ளி வைத்துப் படிப்பிக்கும் அவரது முயற்சியாற் பெரும்பயன் விளைவதே இல்லை. அவரிடம் கற்றுத் தமிழ் வல்லோ ராயினாரை யாண்டும் கண்டிலேம். அன்றியும் அவ் வித்தியா சாலைகளில் நிகண்டு கற்று இலக்கிய ஆராய்ச்சி இல்லாதார்க்குச் சிற்றிலக் கணங்களை மாத்திரம் கற்பித்தலால் அன்னோர் 'வ' வந்தானெனக் கண்டு 'கா' கந்தானென்றும், 'சா' செத்தான் எனக்கண்டு 'தா' தெத்தான் எனவும் கூறுவர் போலத் தமிழைப் பலவாறு விபரீதப் படுத்துகின்றனர். இதனால் தமிழுக்கு வரும் கெடுதியைக் குறித்து மிக அஞ்சுகின்றோம்" என்கிறார்.