உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

நுண்ணிய தல்லர்க் குணர்வரி தாமென நோக்கிப்பின்னும் நண்ணிய சூடா மணியுரிச் சொல்முதல் நானிலத்தே.' "நானிலத் தேயவற் றோடு கயாகர நிகண்டும் தேனிகர் சொல்லக ராதி நிகண்டா சிரியநிகண் டானபின் நூலுமற் றுள்ளவும் ஓர்ந்தீங் கமைவுகொண்டு தூனிகர் சொற்கள் ஒருங்கே திகழத் தொகுத்தெடுத்தே." “தொகுத்த வொருபொள் பலசொல் தொகையின்பல் வகைப்படு தேவர்,வரை வணங்கும் மக்களிவர்க் கிகற்ற னுபோகப் பொருளின் வாழிடம் இவ்விடத்தே புகப்பெரு மக்கள் மரங்கள் இவ் வாறும் பொருள்வகையே.” "வகைகொள் பொருளின் குணஞ்செய லாம்பல் வகைப் பண்புடன் புகலுமிப் பண்பினில் சங்கியைகொள் பல்பொருள் கூட்டமும் தொகைபெறு பல்பொருட்கோர் சொல்லுமென் னத்துலங்கு

மொன்பான்

வகைபெற மண்மேல் நவமணி போலென்றும் மன்னுறவே. "மன்னிய காரிகை யாப்பிலந் தாதி, வரநிகண்டொன்

றுன்னுஞ் சிறிய சிறார்தமக் காக உவந்துரைத்து”

என்று ஆசிரியர் பாடும் தற்சிறப்புப் பாயிரச் செய்யுட்கள் நூல் வந்த வரலாற்றையும் பயனையும் விளக்கும். 1898 ஆம் ஆண்டில் ஆசிரியருக்கு வயது 30 ஆக இருக்கும் போது - இந் நூல் இயற்றி அரங்கேற்றமும் செய்யப் பெற்றது.

7.மீனாட்சியம்மை சந்தத் திருவடி மாலை

மதுரை மீனாட்சி அம்மையின் மீது சண்முகனார் முப்பத்திரண்டு சந்தப்பாக்கள் பாடி, அதனை நூலாக்கி “மீனாட்சி யம்மை சந்தத் திருவடி மாலை" என்று பெயர் சூட்டினார். சந்தத் திருவடி மாலையில் சந்தம் நோக்கி, சொற்களை நீட்டல், குறுக்கல், தொகுத்தல், விரித்தல் ஆதிய விகாரப் படுத்தாமல்விழுமிய பொருள் பயக்கும் முழுமுழுச் சொற்களாகவே தொடுத்துள்ளார்கள். சந்தம் அமைத்து அதற்கு இயையச் செய்யுள் இயற்றல் விலங்கிட்டுக் கொண்டு நடனமாடுவதை ஒப்பது ஒன்றாகவும், இச் சந்தப் பாக்கள் ஆக்கியோர் கருதிய பொருட் போக்குக்குச் சிறிதும் முட்டுப்பாடுறாது செவ்விது செல்லுந் தன்மையினவாக அமைந்துள்ளன. இந்த நயத்தை ஊன்றி உணர்வாரெவரும் வியவாது இரார். அன்றியும் நகர் வருணனை, வையை நதி வருணனை,