உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்புலவர் அரசஞ் சண்முகனார்

57

அவர் அந்திய காலத்தில் இயற்றி முடிக்கத் துணிந்தஇந்நற்காரியம் நிறைவேறாது செய்துவிட்டனவே. இதுவள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு "முன்செய்த தீவினைப் பயனே போலும்" என்று இவர் மாணவரும் இந்நூலின் உரையாசிரியருமான பண்டித.ம. கோபால கிருட்டின ஐயர் குறிப்பிடுகின்றார். இந்நூல் 1919 ஆம் ஆண்டு இ.மா. கோபாலகிருட்டினக்கோன் அவர்கள் வெளியீடாக முதற்பத்து

அதிகாரங்கள் வெளிவந்தன."

“திருத்தகு தெய்வத் திருவருள் ளுவர்தாள்

வருத்தமறச் சென்னிமிசை வைத்துக் - கருத்திருத்தி அன்னார் மறைப்பாட்டோ டியானும் அரைப் பாட்டிசைப்பேன் முன்நே ரிசைப்பேர் மொழிந்து’

என்பது இந்நூல் தற்சிறப்புப் பாயிரச் செய்யுள்.

"என் கடன் பணி செய்து கிடப்பதே" என்று நாளெல்லாம் உழவாரப் படையால்நற்பணி புரிந்து வந்த நாவுக்கரயரை,

“பன்னுமுழ வாரப் பணியும் புரிந்ததென்னோ

மன்னுதமிழ் நாவரையர் வள்ளுவரே- உன்னுங்கால்

ஒல்லும் வகையால்அறவினை ஓவாதே

செல்லும்வார யெல்லாம் செயல்”

என்று எடுத்துக் காட்டுவது பெரிதும் உவக்கத்தக்கதாம். பெரியோர் தாந்தளரினும் தம்நிலை தவறார்என்பதைப் பெருந்தலைச்சாத்தர்க்கு ஏற்றி,

“என்தலைநீ கொள்க எனக் குமணன் வாள் கொடுத்தும் வன்தலைகொள் ளார் சாத்தர் வள்ளுவரே - என்றும் செயற்பால தோரும் அறனே ஒருவற்கு

உயற்பால தோரும் பழி”

என்று கூறுவது அறந்திறம்பாப் புலவர்க்கு இவர்தம் தலை தாழ்ந்து வணங்குவதை அறிவிக்கும்.

6.நவமணிக்காரிகை நிகண்டு

இதனைப் பற்றி முன்னே கண்டோம்:

"எண்ணிய ஆதி திவாகரம் பிங்கலம் இன்னசில மண்ணிடை நின்றன சென்றன பின்னுமற் றையவை