உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

இது நூல்வாழ்த்து.

இளங்குமரனார் தமிழ் வளம் -21

“ஈப்பிற் பிறமிக்க நல்லன இல்லவாம்; நீப்பிற் பிறமிக்க வீடில்லை; நீடுயிர்க்

காப்பிற் பிறமிக்க கொள்வவில்; வள்ளுவன் யாப்பிற் பிறமிக்க இல்.

""

இது வள்ளுவர் யாப்புக்குப் பாராட்டு.

“பன்றிக் குருளை படாம்போர்த்து நிற்பினும் வென்றிக் களிறென விள்ளுப யாவரே

நன்றுகல் லார்லகவி பாடினும் நாவலோர் என்று மதித்தல் இலர்"

இது போலிப் புலவர்க்குச் சூடு.

(66)

(116)

உகரமும் குற்றியலுகரமும் உருவால் ஒப்பதே.எனினும் வல்லின எழுத்துக்களைச் சாரும்பொழுது அவ்வெழுத்துக்கள் இவை குற்றுகரம் என்பதைக் காட்டிவிடுகின்றன. அதுபோல் சிறியர் செவ்வியர்போல் தோன்றினும், வல்லவர்கள் முன் சென்று நிற்குங்கால் அவர்தம் சிறுமை வெளிப்பட்டுத் தீர்வது உறுதி என்னுங் கருத்தினை,

“உவ்வொடு குற்றுகரம் ஒக்கும் உருவெனினும் தவ்வெனுந் தன்மைசார் வல்லாறு தாங்காட்டுஞ் செவ்வியர் போல்வர்சிறியரும் வல்லாரே வெவ்வேறு காட்டி விடும்"

என்னும் 199 ஆம் பாடல்கூறுகின்றது. இது இவர்தம் இலக்கணப் புலமையையும், இயல் நோக்கிப் பொருத்திக் காட்டும் திறத்தையும் வெளிப்படுத்தாநிற்கும். விரிப்பில் பெருகுமாதலின் நூலிடைக் கண்டு நலம் நுகர்தல் இனிதாம்.

5. வள்ளுவர் நேரிசை

வள்ளுவர் நேரிசை, இருபத்துநான்கு அதிகாரங்களுக்கே எழுதப்பெற்றது. இது, "பின்னிரண்டடியில் வரிசைக் கிரமமாக ஒவ்வொரு திருக்குறளையும், முன்னிரண்டடியில் அக் குறள் நீதிக் கியைந்த ஒரு சரித்திரம் அல்லது விசயத்தையும் இரண்டாம் அடியின் மூன்றாம் சீராக 'வள்ளுவரே' என முன்னிலையையும் அமைத்துப்பாடப் பட்டதாகும். ஆயினும் அந்தோ! பிள்ளை அவர்கள் உற்றநோய், குடும்பவிவகாரம், அசிரத்தை முதலியன