உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்புலவர் அரசஞ் சண்முகனார்

55

சண்முகனாரது அறநெஞ்சத்தைத் தௌளிதிற் புலப்படுத்தும் கட்டளைக் கல் எனின் புனைந்துரை அன்றாம்.

நன்னெறி என்னும் கடலினின்று அறிவு என்னும் நாழியால்முகந்து கொள்ளப்பட்டது இவ்விவ்ன்னிசை வெண்பா என்று கூறி நூலினைத் தொடங்குகின்றார் ஆசிரியர். 'வாழ்த்து' முதல் 'மேல் கீழியல்பு' ஈறாக இருபது அதிகாரங்களைத் தன்னகத்தே கொண்டு, அதிகாரம் ஒன்றுக்குப் பத்துப் பத்துப் பாக்களை யுடையதாகி மிளிர்கின்றது.

“மெய்யறிவன் நூலின் விதித்த விலக்கிய செய்தலும் செய்யா விடலும் திகழ்அறன்; மைதீர்மனநாவால் காயத்தால் வாய்ப்பன செய்கஎஞ் ஞான்றுந் தெரிந்து.”

அறத்தின்

இலக்கணத்தை

கூறுகின்றது இப் பா!

(11)

எவ்வளவு

தெளிவாகக்

.

“செல்வம் விரும்பின் பிறர்க்களிக்கத் தேடுக;

கல்வி விரும்பின் நெறிநிற்பக் கற்கமன்;

அல்லலிலா இன்பமுற எண்ணி அருநெறியிற்

செல்லின்இடர் நோன்றல் செயல்.”

(50)

நான்கு வரிகளிலே நாற்பால் (அறம், பொருள், இன்பம், வீடு) சாரமும் கனிகின்றது அல்லவா!

"கொல்லக் கருதில்யா னென்னதெனல் கொல்கமன்;

வெல்லக் கருதிற் புலமைந்தும் வெல்க; நலம்

புல்லக் கருதிற் பரனன்பே புல்லுக; சீர்

சொல்லக் கருதிற் சொலல்."

(100)

கொலையும் அழிவும்புல்லுதலும் பொறாமையும்மிக்க உலகம் கடைப்பிடிக்க எவ்வளவு அருமையான மாற்று வழிகள்!

"நூலினைப் போற்றுதும் நூலினைப் போற்றுதும்

காலங் கருதாது காயம் இருவரையும்

வாலறிவ னற்றாள் வணங்கிப் பிறப்பறுக்கச் சாலத் துணையாத லான்"

(5)