உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

மதுரைத் தமிழ்ச் சங்கத் திங்கள் இதழான செந்தமிழின் வழி வெளிவந்தது.

தமிழ்ச் சங்கத்தில் ஓர் உரையாடலின் போது, "உகர ஊகார நவவொடு நவிலா" என்னுந் தொல்காப்பிய நூற்பா சிந்தனைக் குரியதாயிற்று. "உரைத் தவறுளது" என்று சண்முகனார் கூறினார். 'நச்சினார்க்கினியர் உகர ஊகாரங்கள் தாமே நின்றும் பிறமெய்களோடு நின்றும் பயில்வதன்றி நகர ஒற்றோடும் வகர ஒற்றோடும் பயிலா" என்று கூறுவது ஏற்கத் தக்கது அன்றி, மறுத்தற்கு உரியது அன்று' என்று மறுப்புரை எழுப்பினார் பேராசிரியர். மு. இராகவ ஐயங்கார். “உகரம் வகரத்தொடு கூடி நிற்றல் வழக்கிடையில் உண்டே. கதவு என்னுஞ் சொல்லில் ”வு’ என்று வந்திருப்பது, சூத்திரக் கருத்திற்கு முரணாதோ" என்பது சண்முகனார் எதிர்க் கேள்வி. 'கதவி' வடசொல் -என்பது இராகவர் காட்டிய அமைதி! தங்கள் கருத்துப் படி கதவு என்ற சொல்லை நீக்கினாலும் களவு இயல் (களவியல்) என ஓர் இயல் கண்ட நூலாசிரியரா, நூலகத்து முரணுமாறு நூற்பா வகுப்பார்? களவு என்னுஞ் சொல் ஒன்றே யன்றி துறவு, துரவு, நொவ்வு, முதலாம் தனித் தமிழ்ச் சொற்கள் 'வு' கரத்தால்' இற்றுப்பெற்று இருப்பதற்கு விதியென்னே?' என்று கிளப்பினார் சண்முகனார்; பேச்சு மேலும் தொடருமாறின்றி நின்றது.

"நூற்பாவின் பொருள்தான் என்ன?" என்று பலர் சிந்தனையில் ஆழ்ந்தனர். சிலர் சண்முகனார் உரையை எதிர் நோக்கியிருந்தனர்.

முரண

"உகரம் நகர ஒற்றோடு கூடி 'நு' என மொழிக்கு இறுதியிலும் ஊகாரம் வகர ஒற்றோடு கூடி 'வூ' என மொழிக்கு இறுதியிலும் வாராது என்று நிரல்நிறைப் பொருள் காணின் ஆசிரியர் கருத்து ஆகாது" என்று கூறினார். இவ்வாறு புலவர் அவையிடையேயும், கல்லூரிப் பாடத்திடையேயும் ஆராய்ச்சிக்கு வந்தவையே நுண்பொருட்கோவை என்னும் பெயர் பெற்றதாம். 4.இன்னிசை இருநூறு

அறத்தினை உலகுக்கு உணர்த்துமாறு ஆசிரியரால் எழுதப் பெற்ற இருநூறு இன்னிசை வெண்பாக்களையுடைய நூல் இது. மு. ரா. கந்தசாமிக் கவிராயரால்நடத்தப் பெற்ற 'விவேக பாநு' இதழில் 1904 ஆம் ஆண்டு தொட்டு வெளிவந்தது. தனி நூலாக ஆக்கித் தருமாறு பலரும் வேண்டிக் கொண்டதற்கு இணங்க, கவிராயரே 1-7-1913 இல் தம் வெளியீடாக வெளியிட்டார். இந் நூல்