உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

ஆகும். 30 பாக்களையுடைய இந்நூல் 1901 ஆம் ஆண்டில் பாண்டித்துரைத் தேவரவர்கள் தலைமையில், ஆன்றவிந் தடங்கிய சான்றோர்கள் முன்னிலையில் அரங்கேற்றமாயது. 1903 ஆம் ஆண்டில் மு.ரா. கந்தசாமிக் கவிராயர் எழுதிய உரையுடன் அவராலேயே வெளியிடப் பெற்றது.

"ஒருமாலை மாற்றுச் செய்யுள் செய்தற்கே படித்தவர்கள் மிகவும் கவலையுடைதற்குரிய இக்காலத்தில் மேற்படி செய்யுள் பலவற்றில் பிரபந்தமொன்று இயற்றியிருப்பதும், அச் செய்யுட் களைப் பொருளணி அமைந்த செய்யுட்களாகவே இயற்றியிருக்கும் கல்வி வன்மையும் நிரம்ப வியக்கற்பாலன" என்று மாலை மாற்று மாலையை உ.வே. சாமிநாதையர் அவர்கள் பாராட்டியுள்ளார்கள். மாலை மாற்று மாலைச் செய்யுளுள் ஒன்றும், அதன் பொருளும் வருமாறு.

வாகா னவவன காவா

வாகா னவவன காவா

வாகா னவவன காவா

""

வாகா னவவன காவா

சொற் பிரிவு :

1) வா. கானவ -வல் - நகா -வா 2) வாகு-ஆன. அவன் -அகா ஆ. 3) ஆ -கா-நவவன -கா- கா -ஆ

4) வாகு-ஆனவ-அனகா-வா

பொருள் : வேட உருக்கொண்டானே வருக; வலிய மலைகளையுடையோனே;

வாவுகின்ற அழகிய டப வாகனத்தையுடைய அச்சிவபிரானது மனத்தில் விளங்குபவனே; என்னை இப்பொழுதே காத்தருள்க. புதுமையான அழகுடையவனே, கை கற்பகமாக ஆனவனே, மலரகிதனே வருக.

9. ஏகபாகநூற்றந்தாதி

ஓரடியினையே நான்கு முறை எழுதி ஒரு பாடலாக ஆக்கி, வரிவரிதோறும் வெவ்வேறு பொருள் தரும் நூறு பாட்டுகளை யுடையது இந்நூல். மிக இளம் பருவத்திலே யாக்கப் பெற்ற நூல் இது என்பதை முன்னரே அறிவோம். ஒரு பாடலின் அந்தம் மற்றொரு பாடலின் ஆதியாக இருக்க யாக்கப்பெற்றமையால் இந்நூல் 'ஏகபாத நூற்றந்தாதி' எனப் பெயர் பெற்றது.