உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்புலவர் அரசஞ் சண்முகனார்

61

இந்நூலுக்கு ஆசிரியராலேயே உரை எழுதப் பெற்று, 1902 ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் தொடங்கி, சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் வெளியிட்டுவந்த ஞானசித்தி இதழில் வரன்முறையாக வெளிவந்தது. அரிதிற் பொருள் காணக் கிடக்கும் இந்நூற் பாக்களுள் ஒன்றும் அதன் பொருளும் வருமாறு:

“திருத்தகை யாகத்த மாலை யதணித் திலகவையே திருத்தகை யாகத்த மாலை யதணித் திலகவையே திருத்தகை யாகத்த மாலை யதணித் திலகவையே திருத்தகை யாகத்த மாலை யதணித் திலகவையே”

-

1. திரு - தகு - ஐயா - கத்த - மாலையது - அணித்து இல

கவ்வை - ஏ.

ஏ.

யே

ஐயே.

2. திருத்த - கை - யாகத்த-மாலைய தண் - நித்தில - கவ்வை

A

3. திரு - தகை - ஆகத்த - மால், ஐய தணித்து -இலக-வை

-

-

4. திருத்த கை ஆகு அத்தம் - ஆலையதணி திலக

-

(1) அழகிற்குரிய ஐயனே, கர்த்தனே, மாலைப் பொழு தாயிற்று (பறவை முதலியவற்றின்) ஒலியும் இலவாய் அடங்குகின்றன. (2) பூரணனே! ஒழுக்கமுள்ள வேள்வித்தலைவா! தண்ணிய முத்து மாலை அணிந்தவனே! அலரே பரவா நின்றது. (3) இலக்குமி வசிக்கும் பெரிய மார்பத்தையுடைய விண்டுவுக்குத் தலைவா, தலைவியின் காம வேட்கையைத் தணித்து விளங்கத் தலையளி செய்தாயாக. (4) அவள் வாட்டம் திருத்துக. கையின் கணுள்ள பொருளை ஒப்பாய், திருத்தணி ஆலயத்து விளங்கும் திலகம் போல்பவனே, அழகனே!

10. சிதம்பர விநாயகர் மாலை

சோழவந்தான் கல்மண்டபத்தில் எழுந்தருளிய சிதம்பர விநாயகர் மீது சண்முகனார் பாடிய முப்பது பாடல்களைக் கொண்ட நூலாகும் இது.

“ஈதல் இசைபெறுதல் எக்காலும் நின்பதமே ஓதல்இவை நாயேன் உறப்பணிப்ப தெக்காலம்? இயலாதி முத்தமிழும் மற்றுமெனக்குணர்த்தி மயலாதி நீக்கியெனை வாழ்விப்ப தெந்நாளோ?"