உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

என்பனபோல் சீரார் சனகைச் சிதம்பர விநாயகனிடம் வேண்டும் வேட்கையுரைகள், தாயுமான அடிகளின் கண்ணிகளை நினை வூட்டத் தவறா.

11. திருவடிப்பத்து

மதுரை மீனாட்சியம்மையின் திருவடிப் பெருமையை வியந்து பத்து நேரிசை வெண்பாக்களால் பாடப் பெற்ற நூல் திருவடிப்பத்தாகும்.

உள்ளம், உரை, செயல் ஆகிய மூன்றானும் ஒன்றுபட்டு இறைவனடி தொழுதலே இன்பங் கூட்டும் என்பதனை,

“ஈரம் படைத்த இதயமும் எக்காலும்

ஓரம் படையா ஒருநாவும் - காரென்ன ஈகையும் பெற்றோர் இருக்கும் திருக்கூடல் தோகையடி சேர்மின் தொழுது”

என்னும் பாடலால் காட்டும் நயம் அறிந்தின்புறற்பாலதாம்.

“ஐயமிடாரை அருக்கன் மகனென்று

பொய்யேபுகலும் புலவீர்காள்'

என்று விளிப்பதும்,

"கல்லய்ப் பிறந்திலேன் காமாரி கூடலிலே நல்லய் மணம்புரிந்த ஞான்று”

என்று வேட்கையுரைப்பதும், கற்குந்தொறும் களிப்புத் தருவதாம்.

சந்தத் திருவடிமாலை, சிதம்பரவிநாயகர்மாலை, திருவடிப் பத்து ஆகிய மூன்றையும் சேர்த்து 1914 ஆம் ஆண்டில் மு. ரா கந்தசாமிக் கவிராயர் வெளியிட்டார். சந்தத் திருவடிமாலைக்குச் சண்முகனார் எழுதிய குறிப்புரை உண்டு.

இந்நூல்களையன்றி இசை நுணுக்கச்சிற்றுரை, பஞ்சதந்திர வெண்பா, ஆகு பெயர் அன்மொழித் தொகை ஆராய்ச்சி ஆகிய நூல்களும், நுணங்கு மொழிப் புலவர்க்கு வணங்கு மொழிப் புலவர் விண்ணப்பங்கள், இருவல மாறுகோள் ஒருதலைத் துணிவு, ஆனந்தக் குற்றம் மதுக்கூரார் புலம்பலுக்கு வாயாப்பு, மதுக்கூரார் புலம்பலுக்கு வாயாப்பு வச்சிரம், கொழுத்துன்னூசி விளக்கமும் மறுதலைக் கடாமாற்றமும் ஆகிய கட்டுரைகளும் எழுதித் தமிழ்த்

தொண்டாற்றியுள்ளார்.