உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்புலவர் அரசஞ் சண்முகனார்

63

காப்பியத்திற்கு ஒருவர் பின் ஒருவராகத் தம்முள் ஒருவரை ஒருவர் மறுத்துரை எழுதிய வித்தகர் இதுகாறும் ஐவராவர் என்பதூஉம், அவ்வுரைகளைத்தழுவிச் செய்த நன்னூல் முதலாய பின்னூல் பலவு முன்னூல் போலப் போக்கற்றனவல்ல என்பதூஉம், கற்றறிந்த செப்பமுடையா ரெல்லாரும்ஒப்ப முடிந்தவே யாகலின் அவற்றைப் பற்றி ஈண்டான்றேனும் உரையேன். (தொல்காப்பியப் பாயிர விருத்தி, நன்றி கூறல்)

சண்முகனார் தோற்றத்தால் இலக்கணம் விளக்கமுற்றது. ஆராய்ச்சி விரிவுற்றது; தருக்கம் உயர்வுற்றது; வர கவிக்கும் வர கவியாய், இயற்கவிக்கும் இயற்கவியாய் இலங்கினார். புலவரைத் திணறச் செய்யும்கவிகள், இவர் பாடியவற்றுள் மிகுதி. சிறாரும் உணருமாறான கவிகள் இயற்றாமலும் இல்லை. இவ்வாறு உரிய வழிகளிலெல்லாம் உவந்து தமிழ்த் தொண்டாற்றிய அண்ணல் சண்முகனாரை நெஞ்சார நினைந்து வாயார வாழ்த்துதல் வேண்டும். இது தமிழர் கடன்; இதற்கு முதன்மையானது அவர் இயற்றிய நூல்களைக் கற்றுத் தெளிவதே!