உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. இளமையும் கல்வியும்

"தோன்றிற் புகழொடு தோன்று" - என்றார் பொய்யா மொழியார். புகழொடு தோன்றிய பெருமக்களால் அவர்கள் பிறந்த மரபும், குடியும், இடமும், நாடும் பெருமையடைகின்றன. அவ்வகையில் தோன்றிய பெருமக்களுள் ஒருவர் வேதநாயகர். அவர் தம் இளமையும் கல்வியும் பற்றி இவண் காண்போம்.

திருச்சியை அடுத்த வேளாண் குளத்தூரில் கத்தோ லிக்கக் கிறித்தவருள் சிறந்தோராய் விளங்கினார். சவரி முத்துப்பிள்ளை என்பார். அவர்தம் அருமை மனைவியார் ஆரோக்கிய மரியம்மாள். இவர்களின் செல்வ மகவாக ஆயிரத்து எண்ணூற்று இருப்பத்தாறாம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் பதினொன்றாம் நாள் வேதநாயகம் பிறந்தார்.

வேதநாயகர் குடும்பம் அன்னைத் தமிழே அன்றி, ஆங்கிலத்திலும் அரிய புலமை பெற்றது; மருத்துவத் தொழிலில் மாண்புற்றது; சமயச் சால்பிலே தலைமை பெற்றது; தொண்டு புரிதலில் துலக்கம் எய்தியது; ஆகவே அக்குடியில் பிறந்த வேதநாயகருக்கு இளமையிலேயே கல்வித் திறமும் தொண்டு உள்ளமும் இயற்கையாக வாய்க்கப் பெற்றன.

வேதநாயகர் குழந்தைப் பருவத்தினராக இருந்த நாளில் செல்வர் வீட்டுப்பிள்ளைகள் கல்வியில் சிறிதும் கருத்துச் செலுத்தினார் அல்லர். வீண்பொழுதுபோக்கு, வெட்டிப் பேச்சு, வேண்டாச் செயல் இவற்றில் ஈடுபட்டனர். பெரியவர்களும் தம் குழந்தைகளுக்குச் 'செல்லங்' கொடுத்து வளர்த்துச் சீரைக் கெடுத்தனர். ஆனால் வேதநாயகர் செல்வக் குடும்பத்தில் பிறந்திருந்தும் அக்கேடுகட்கு ஆளாயினார் அல்லர்.

,

வேதநாயகரின் அன்னையார் மரியம்மாள் தம் மைந்தர் கல்விப் பயிற்சிலே பெரிதும் கருத்துச் செலுத்தினார். உடல் நலத்தையும் உள்ளத் தூய்மையையும் கல்வித் திறத்தையும் ஒருங்கே பேணி வளர்த்தார்; அதனால் வேதநாயகர் துள்ளித் திரியும் பிள்ளைப் பருவத்திலேயே கூரிய அறிவும் சீரிய பண்பும்