உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

உள்ளவராகத் திகழ்ந்தார்; பார்த்தவர் பாராட்டியுரைக்கும் பாங்கு பெற்றார்!

பெற்றோரிடத்தில் தம் பத்தாம் அகவை வரை வேதநாயகர் கல்வி பெற்றார். அதன்பின் திரிசிரபுரம் சென்றார்.; ஆங்கிலம் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்த தியாகப்பிள்ளை என்பாரை அடைந்து கற்றார். தவறின்றி ஆங்கிலம் எழுதவும் பேசவும் கற்றார்; அதேபொழுதில் தமிழில் கவிதை இயற்றவும் தேர்ச்சி பெற்றார். பலருடைய விருப்பத்திற்கு ஏற்ப அவ்வப்போது பல பாடல்கள் பாடினார். அத் தொடக்கப் பணியிலேயே எதிர்காலப் பெரும் புலவர் என்பதை நன்கு வெளிப்படுத்தினார்.

வேடிக்கை விளையாட்டுக்களில் வேதநாயகர் இளம் பருவத்திலேயே ஈடுபட்டறியார். தமக்குக் கிடைத்த பொழுதுகளை யெல்லாம் தமிழ் ஆங்கில நூல்களைக் கற்பதிலே செலவிட்டார். “பாடம் ஏறினும் ஏடது கைவிடேல்" என்பதற்கு ஏற்ப மீண்டும் மீண்டும் தெளிந்து கற்றார். சிலர் பள்ளிப்படிப்பு முடிந்ததும் கல்வியே முடிந்துவிட்டதாகக் கருதுவது உண்டு. ஆனால் வேதநாயகர், பள்ளிப் படிப்பு முடிந்த பின்னரே உண்மையான கல்வி தொடங்குகிறது என்னும் கருத்து உடையவர்.பள்ளிப் படிப்பு பிற்காலப் படிப்பிற்கு அடிப்படை! பிற்காலக் கல்வியால்தான் மாளிகை எழுப்ப வேண்டும். பூட்டி வைத்திருக்கும் நிதியறைத் திறவுகோல் பள்ளிக் கல்வி. பிற்காலக் கல்வியால் தான் அறையைத் திறந்து செல்வக்குவியலை அடையவேண்டும்". இவ்வாறு அழுத்தமாகக் கூறியவர் - எழுதியவர் - வேதநாயகர். ஆகவே அவர், தம் கல்வித் திறம், கவிதை, ஆற்றல், அறிவு, ஆராய்ச்சி ஆகியவற்றை வளர்த்துக் கொண்டது இயல்பேயாம்.

வேதநாயகர் இளமைப் பருவம் பண்பும் பயனும் மிக்கது. இளைஞர்களுக்கு நல்வழி காட்டுவது; அவர் காட்டிய வழியில் சென்று நல்வாழ்வு வாழ்தல் இன்றைய இளைஞர்தம் தலையாய

கடமையாம்.