உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

87

சாதி வேறுபாடற்ற தமிழ்ச் சமுதாயம் காணப் பாடுபட்டு ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்ற நெறியில் தமிழரை ஆற்றுப்படுத்திய அடிகளாரின் புகழ் என்றென்றும் வையத்து வாழும் என்பது உறுதி.

- பேரா. அ. மு. பரமசிவானந்தம்

ஆசிரியர் மறைமலையடிகள் தமிழ் விடுதலைக்காக 'தமிழ்மொழி', 'தமிழ்நெறி’ தோன்றிய தமிழ் ஞாயிறு ஆவார். மிக அமைதியாய் இவ் விடுதலைப் புரட்சியைத் தமது புலமை நலத்தால் அவர்கள் செய்து வந்தார்கள்.

ம்

வ்

- தவத்திரு அழகரடிகள்.

அடிகளார் திருச்சிக்கு ஒரு முறை பொழிவுக்கு வந்த போது அவரை அழைத்த அன்பர் "தங்களைக் கொண்டே தமிழையும் சைவத்தையும் வளர்க்கவேண்டியுள்ளது. தாங்களோ ஒரு வருகைக்குப் பெருந்தொகை கேட்கின்றீர்கள். இவ்வாறு கேட்பின் எத்துணை பேர் அதற்கு ஈடு கொடுக்க முடியும். எனவே இனி இம் முறையைக் னி கைவிட வேண்டும் என்றார். அப்பொழுதில் அதனை மறுத்துரையாத அடிகள் அவர் தம்மைச் சென்னையில் மீண்டும் காண வந்தபோது, "அன்பரே அன்று திருச்சியில் சொன்னதை நினைவு கூர்கின்றேன். என் பேச்சக்குப் பெரும் பொருள் கேட்பதைக் குறையாகக் குறித்தீர்கள். அது குறையா? அதுபற்றிச் சிறிது இப்போது நினையுங்கள்.

"ஒரு பொது விழாவோ திருவிழாவோ நிகழின் அதற்கு ஒரு பாடகியை அழைக்கின்றீர்கள். அவளுக்கு இருநூறு முந்நூறு என்று வாங்குகின்றீர்கள். கூத்தாடும் கூத்திக்கு அதுபோல் பெருந்தொகை கொடுக்கின்றீர்கள் பெரு வங்கியக்காரனுக்குப் பெருந்தொகை வழங்கப்படுகின்றது. யான் அந்தக் கூத்தும் பாட்டும் குழலும் பயிலாமல் தமிழ் படித்த பாவம் குறையாகி விட்டது. அப்படித்தானே, என்றார். வினவிய அன்பர்

கண்ணீர்வடித்தாராம்.

அடிகளார்க்கு இளமையில் தமிழ் கற்பித்த நாராயண சாமியார், அடிகளார் பழந்தமிழ்ப் புலமைக்கு வியந்தவராய்ச் சங்கப் புலவர் வருகிறார் சங்கப் புலவர் போகிறார் என் கூறினார். அது பின்னர்ப் பிறர் கூறும் வழக்கும் ஆயிற்று.

று

தமிழ் இயற்கை மொழி. இந்தியா முழுதும் வழங்கிய மொழி என நெல்லையில் பேசினார் அடிகள். இந்தியாவின் ஒரு