உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

89

அடிகளார் நூல்களைத் தாம் பயன்படுத்தியபின் இதனைச் சேர்த்துத் தொகுத்து வைத்த முறை சுவை உடைய கனி கிழங்குகளைத் திரட்டி வைத்த சபரியின் செயலையே நினைவூட்டுவதாகும். சீராமன் இலக்குமணன் ஆகியவர்கள் சேவையில் ஈடுபட்டு அவர்களுக்கு அளிப்பதற்காகவே சபரி அவற்றைத் தொகுத்துவைத்தாள். மறைமலையடிகள் இத் தொகுப்பைத் திரட்டியதும் இதுபோலப் பொதுமக்கள் உளத்தில் கொண்டே என்பது

சேவையை குறிப்பிடத்தக்கது.

தான்

பாமாலை :

முனைவர் எசு. ஆர். அரங்கநாதன் நூலகத்திறப்பு விழாப்பொழிவு 24-8-58.

வாழ்த்தாத நாளில்லை வையகம்

-

மறைமலையடிகள் மறையாத் திருப்பெயர் வாழ்த்

ஆழ்ந்து கடலில் முத்தெடுப் பார்போல்

அகன்ற உலக இலக்கியம் அனைத்திலும் வீழ்ந்து பொருளுண்மை விளக்கும் ஆற்றலால் வெல்ல முடியாத நல்லா சிரியனை - வாழ்த். தென்னாடு சார்ந்த குமரிப் பெருநிலம்

திரைகடல் மறைத்த உண்மைச் செய்திக்குப் பொன்னேடு காட்டும் புலவர்க்குப் புலவனைப்

பொழுதெல்லாம் தமிழுக்குழைத்த தலைவனை - வாழ்த்.

மறையெனப் படுவது தமிழ்நான் மறைநூல்

மற்றை மறைநூல் பின்வந்த குறைநூல்

முறையாய் இவைகட்குச் சான்றுகள் காட்டி

முழக்கஞ் செய்த முத்தமிழ் அறிஞனை - வாழ்த்.

-பாவேந்தர் பாரதிதாசனார்.