உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் பல்துறையாற்றற்

பதிகம்

1. பேராசிரியர்

நூலும் நுவல்வும் நுணங்குரையும் நன்பதிப்பும் சாலும் இதமும் சமமாக - மேலுயர்வுப் பேரா சிரியர் பெரும்பேர் மறைமலையார்

நேரார் உளரிந் நிலத்து.

2. பெரும் புலவர்

தொல்காப் பியமுதலாந் தொன்னூலும் பின்னூலும் பல்காற் றனிப்பாடல் பட்டயமும் - ஒல்காப் பெரும் புலவர் உள்ளும் பெரியார் தனியே

அரும்பொன் மறைமலை யார்.

3.பாவலர்

உரைநடையும் பாவும் ஒருங்கே சிறந்த

விரைவுடையார் சில்லோர் வியன்பார் - மறைகலையார் செம்மைப் பொருளணிசேர் செய்யுள் திருவொற்றி

மும்மணிக் கோவை முறை.

4. ஆராய்ச்சியாளர்

நுண்மதி கல்வி நுடங்காத் தறுகண்மை

நண்ணிலை மன்னலம் நல்வாய்மை - திண்முயற்சி சாலுமா ராய்ச்சிச் சதுரர் மறைமலையார்

பாலையும் முல்லையும் பார்.

5. மும்மொழிப் புலவர்

மொழியும் இலக்கியமும் முத்தமி ழும்பேச்

சழியும் வடமாங் கிலமும் - கழிபுலமை

கொண்ட மறைமலையார் கோன்மை தமிழ்நிலமுன் கண்டதும் கேட்டதும் இல்.