உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை 6.மொழிபெயர்ப்பாளர்

வேற்று மொழியின் விரகன் விழுப்பனுவல் ஆற்று மரபும் அரும்பொருளும் - தேற்றி அடிகள் மொழிபெயர்க்கும் ஆற்றற்குச் சான்று முடிகொள்ளும் சாகுந் தலம்.

7. சொற்பொழிவாளர்

இன்குரலும் இன்சொல்லும் இன்னிசையும் இன்கதையும் நன்பொருளும் ஏதுவுடன் நற்காட்டும் - தென்பாய்ப் பகைவரும் உண்ணாது பன்னாளும் வேட்கும்

வகையடிகள் சொற்பொழிவு வாய்ப்பு.

8. எழுத்தாளர்

கடிதமும் கட்டுரையும் கண்டனமும் கற்கும் படியெழுதும் பாடமும் பன்னூல் - நடிகதையும் மற்றோர் உரைமறுப்பும் மன்னும் புதினவரை வுற்றார் மறைமலை யார்.

9. பல்கலைச் செல்வர்

தோற்றுந் தொலையுணர்வு தூய மனவசியம் ஆற்றும் அறிதுயில் ஆர்வாழ்வு - மாற்றும் மறுமை மறைமலையார் மாணும் கலைகள்

பொறுமை யுடன்கற்ற போக்கு.

10. தனித்தமிழ்த் தந்தையார்

மூவா யிரமாண்டு மோதும் வடமொழியாற்

சாவாந் தகைநின்ற தண்டமிழ் - மேவாக்

குமரித் தனிநிலைக்குக் கொண்டுவந்த அப்பர்

அமரர் மறைமலையார்.

நம்மொழிப் புலமை எல்லாம்

நடுத்தெருப் புலமை யாகும்

செம்மொழி பேசி வந்த

திருமறை மலையார் பெற்ற

91

மொழிஞாயிறு பாவாணர்.