உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரித்துக்

பொழிவாளன் புகல்வு

மறைமலையடிகளாரையும் அவரது ஆராய்ச்சியையும் காணல் இயலாது. பிரிவறியாத் தற்கிழமைப் பொருளது அவர்தம் ஆராய்ச்சி!

"ஆராய்ச்சியே அடிகளார்; அடிகளாரே ஆராய்ச்சி" என்பது அவர்தம் எந்நூலைக் கற்றாரும், எப்பொழிவைக் கேட்டாரும் கொள்ளும் உறுதியாகும்!

'மறைமலையடிகளின் ஆராய்ச்சித் திறன்' என்னும் இப்பொழிவு நூல், எட்டுப் பகுதிகளைக் கொண்டு இயல்கின்றது.

மலைமலையடிகளின் சீர்மை குறித்த உரையும் பாட்டும் பற்றியது முதற் பகுதி. தமிழ்த் தென்றல் திரு.வி.க.வும், மொழி ஞாயிறு பாவாணரும் மொழிந்ததும் அவை. ஆராய்ச்சி என்பதன் தமிழ்ச் சொல் விளக்கமும் அதன் தகவும் அடுத்து வரும் ஆராய்ச்சி.

ஆராய்ச்சிக்கு மூலவைப்பும் முறைத் திறமும் காட்டுவது மூன்றாம் பகுதியாம். அடிகளார் பயின்ற நூல்களும் பயின்ற முறையும் என்பது. ஆராய்ச்சி குறித்து அடிகளாரே தம் எழுத்தில் காட்டிய குறிப்பும் விளக்கமும் கொண்டது, அடிகளார் காட்டும் ஆய்வியல் நெறிமுறைகள் என்னும் நான்காம் பகுதி.

ஐந்தாம் பகுதி அடிகளார் இயற்றிய நூல்களைக் கால அடைவில் காட்டுவது. காலம் என்பது முதற்பதிப்பில் இடம் பெற்ற காலம்.

ஆறு, ஏழு, எட்டாம் பகுதிகள், அடிகளாரின் ‘ஆராய்ச்சித் திறன்' குறித்த விளக்கப் பகுதிகள். அடிகளாரின் நூல்கள் அனைத்தும் கொள்ளல் விரிவுப் பணியாகலின், பொழிவின் அளவுக்கு ஏற்ப இலக்கிய ஆராய்ச்சிக்கு 'பட்டினப்பாலை'யை யும், சமய ஆராய்ச்சிக்கு 'மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்' என்னும் நூலையும், அறிவியல் ஆராய்ச்சிக்கு 'மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை' என்னும் நூலையும் எடுத்துக் கொண்டு