உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

-

இளங்குமரனார் தமிழ் வளம் 22

சுருங்கிய வகையில் ஆராய்ச்சித் திறத்தைக் காட்டியவை இம்முப் பகுதிகளுமாகும்.

இப்பொழிவு ஆற்றவும், நூலாகித் தமிழ்வளம் செய்யவும் கிட்டிய வாய்ப்புப் பெரிது. அதற்கு அடிப்படையாம் அறக் கட்டளை வைத்து, ஆய்வைத் துலங்கச் செய்பவர், உரையும் பாட்டும் உரைப்பாட்டும் திரைக்கலையும் வல்லவரும், தமிழாய்ந்த தமிழ்த்தலைவனே தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்னும் பாவேந்தர் விழைவை நிறைவு செய்பவரும் ஆகிய முதல்வர் கலைஞர் அவர்கள் ஆவர்.

தாம் பெற்ற இராசராசன் விருதுத் தாகை ஓரிலக்கத்தையும் தம்மைக் குடல் விளக்கம் செய்த பெற்றோர்

முத்துவேலர் அஞ்சுகத்தம்மையர் பெயரில் ஆய்வு அறக்கட்ட ளை ஆக்கிய அப்பேறே, இப்பொழிவுக்கும் நூலுக்கும் வாய்த்த வான் சிறப்பாகும். மலையடிகளாரின் “சமய நோக்கு' என்னும் பொழிவு செய்யும் பேறு பெற்றேன், அப்பொழிவும் ஆய்வுப் பொழிவே. மறை மலையடிகளாரின் ஆராய்ச்சித் திறன் பற்றிய ஆய்வுப் பொழிவே. அப்பொழிவும் இணைக்கப் பெற்றுள்ளது.

தனித்தமிழ்த்

தந்தை

மறைமலையடிகளாரின் ஆராய்ச்சித் திறன் குவித்து எளியேன் பொழிவை நூலாக்கி வழங்க விழைந்த தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கும் ஆட்சிக் குழுவுக்கும், அறக்கட்டளைக் குழுவுக்கும் பெங்களூர்த் தமிழ்ச் சங்கப் பெருமக்களுக்கும் நன்றியுடையேன்.

அறக்கட்டளை அடங்கிக் கிடத்தலால் ஆகும் தமிழ்ப் பயன் என்ன? அதனை நூலாக்கி உலாக் கொள்ள வைக்கும் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்திற்கும், அதன் அமைச்சர் பெருமகனார் முனைவர் திரு. இரா. முத்துக்குமாரசாமி அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியன்.

வாழிய நலனே வாழிய நிலனே!

அன்புடன்,

இரா. இளங்குமரன்