உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

உரை :

66

இளங்குமரனார் தமிழ் வளம்

228

"அற்றை நக்கீரனாரும் பிற்றைச் சிவஞான முனிவரரும் ஓருருக் கொண்டு வேதாசலனாராகப் போந்து, இற்றைத் தமிழ் வளர்க்கிறார் என்று யான் அவரைச் சொல்லாலும் எழுத்தாலும் போற்றுவ துண்டு. வேதாசலனார் தமிழ் செந்தமிழ் சங்கத்தமிழ் என்னை அவ்வாறு சொல்லவும் எழுதவும் செய்தது. இந்நாளில் சங்க நூல்களின் சுவையைத் தமிழ் நாட்டுக்கு ஊட்டிய பெருமை வேதாசலனார்க்கு உண்டு என்று அறுதியிட்டுக் கூறுவேன். அவர் ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர் வடமொழியும் தெரிந்தவர்" வா.கு.பக்.163

தென்னாடு பன்னெடுங்காலம் தன்னை மறந்து உறங்கியது. அவ்வுறக்கம் போக்கிய பெருமை மறைமலையடிகட்கு உண்டு.

அவர் தமிழ்ப் புலமையும் வடமொழிப் புலமையும் ஆராய்ச்சியும் பேச்சும் எழுத்தும் தொண்டும் தென்னாட்டை விழிக்கச் செய்தன. தென்னாடு அடிகளால் விழிப்புற்றது என்று மண்ணும் முழங்கும் மரமும் முழங்கும்.

"அடிகள் பேச்சு பல பேச்சாளரைப் படைத்தது; எழுத்து பல எழுந்தாளரை ஈன்றது; நூல் பல நூலாசிரியன் மாரை அளித்தது. அடிகளே தென்னாடு, தென்னாடே அடிகள் என்று கூறல் மிகையாகாது.

-

மறைமலையடிகள் மாண்பு - முன்னுரை

பாட்டு : மறைமலையடிகள் பல்துறையாற்றற் பதிகம் 1. பேராசிரியர்

நூலும் நுவல்வும் நுணங்குரையும் நன்பதிப்பும்

சாலும் இதழும் சமமாக - மேலுயர்வுப்

பேராசிரியர் பெரும்பேர் மறைமலையார்

நேரா ருளரிந் நிலத்து.

2. பெரும் புலவர்

தொல்காப் பியமுதலாந் தொன்னூலும் பின்னூலும்

பல்காற் றனிப்பாடல் பட்டயமும் - ஒல்காப்

பெரும்புலவ ருள்ளும் பெரியார் தனியே

அரும்பொன் மறைமலை யார்.