உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்

109

அங்ஙனமாக விழுமிய தமிழ்ப் பழநூல்களில் எமது கருத்து ஈர்ப்புண்டு நின்று பயின்ற பயிற்சியினாலேயே செய்யுளும் உரையும் தனிச் செந்தமிழ் நடையில் எழுதும் திறம் எமது இளமைப் பருவத்திலேயே எமக்கு வாய்ப்பதாயிற்று என்கிறார்.

அடிகளார் 15.6.18876 இல் பிறந்தார், அவர்க்கு இருபத்தோராம் அகவை என்பது 1897 ஆம் ஆண்டு அந்த ஆண்டுகள் தொல்காப்பியம் (1847. 1868.1885) சிலப்பதிகாரம் (1880) சிந்தாமணி (1887) கலித்தொகை (1887) பத்துப்பாட்டு (1889) மணிமேகலை (1894) புறநானூறு (1894) என்பவை அச்சில் வெளிப்பட்டிருந்தன, திருக்குறள் மூலம் 1812 ஆம் ஆண்டிலும். உரைப்பதிப்பு 1830 ஆம் ஆண்டிலும் வெளிப்பட்டன, இந் நூல்களையெல்லாம் அடிகளார் அடிகளார் கற்றுத் தெளிய மனங் கொள்ளவும் வாய்ந்தன, ஐங்குறுநூறு. அகநானூறு, பதிற்றுப் பத்து, நற்றிணை, குறுந்தொகை, பரிபாடல் ஆகிய நூல்கள் 1903 முதல் 1918 ஆம் ஆண்டுகளுக்குள் வெளிவந்தவை. ஆகலின் வை அடிகளார் தம் இளந்தைப் பருவக் கல்வி நூல்களுள் இடம் பெற்றில, இவற்றைப் பின்னே கற்றார் என்று கொள்ளுதல் முறையாம்.

அடிகளார் தம் ஆய்வுக்கெனத் தொகுத்து வைத்த நூல் தொகுதிகள் எத்தகையவை என்பதையும் அற்றை அடிகளார் பயன்படுத்திய வகையையும் 24.8.58 இல் சென்னை இலிங்கித் தெருவில் மறைமலையடிகள் நூலகத் திறப்பு விழாவில் நூலக யக்குநர் முனைவர்திரு. அரங்கநாதனார் எடுத்துரைத்தார்.

'அடிகளார் நூல்களையெல்லாம் முற்கால ஊழிகளின் காலங்கடந்த மதிப்புடைய கருத்துகளின் திருவுருக்கள் என்றே கருதினார். அவற்றை அந்நிலையிலே பயன்படுத்துவதற்கு அவர் விதிர்விதிப்புக் கொண்டார். தாம் பயன்படுத்தியதன் பின், அவர் இதனைச் சேர்த்துத் தொகுத்து வைத்த சபரியின் செயலையே நினைவூட்டுவதாகும், சீராமன் இலக்குமணன் ஆகியவர்கள் சேவையில் ஈடுபட்டு அவர்களுக்கு அளிப்பதற்காகவே சபரி அவற்றைத் தொகுப்பைத் திரட்டியதும் இதுபோலப் பொதுமக்கள் சேவையை உளத்தில் கொண்டேதான் என்பது குறிப்பிடத்தக்கது.

"அடிகள் ஏடுகளைத் திரட்டிச் சேர்த்தவைக் கடவுளின் திருவுணவுக்காகக் கண்ணப்பர் உணவு தேர்ந்தெடுத்துச் சேர்த்த முறையை ஒப்பதாகும். முதலில் தாம் தின்று சுவை பார்த்துக்