உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. அடிகளார் பயின்ற நூல்களும் பயின்ற

முறையும்

அடிகளார் ஒன்பதாம் வகுப்பளவே பள்ளிக் கல்வி பெற வாய்த்தது. அதன் பின் தனிக் கல்வி கற்கவே வாய்த்தது, பொத்தக வாணிகர் நாராயணசாமி என்பார் அறிவறிந்த புலமைத் தொடர்பு அடிகளார்க்குக் காலத்தால் வாய்த்த பேறு ஆயிற்று. தம் பதினைந்தாம் அகவை முதல் இருப்பத்தோராம் அகவைக்குள் கற்ற நூல்கள் இவை என்பதை அடிகளார் தாம் இயற்றிய திருவொற்றியூர் முருகர் மும்மணிக் கோவை முகவுரையில் குறிப்பிட்டுள்ளார்.

"தொல்காப்பியம் திருக்குறள் சிற்றம்பலக் கோவையார் என்னும் மூன்று நூல்களையும் முழுதும் நெட்டுருச் செய்து முடித்தோம்.

"கலித்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், நாலடி முதலிய நூல்களிற் பெரும் பகுதிகள் அங்ஙனமே நெட்டுருச் செய்து முடிக்கப்பட்டன.'

""

சிவஞான போதம் சிவஞான சித்தியார் என்னும் நூல்கள் இரண்டும் முழுமையும் நெட்டுருச் செய்து முடிக்கப் பட்டுள்ளன.

இவையேயன்றி நன்னூல் விருத்தி, இறையனார் அகப்பொருள் உரை. தண்டியலங்காரம் முதலான நூல்களும் முன்னமே முழுமையும் நெட்டுருச் செய்து முடிக்கப்

பட்டனவாகும்.

"கல்லாடம், சீவக சிந்தாமணி, பெரிய புராணம் என்னும் நூல்களின் சொற்சுவை பொருட் சுவைகளில் பெரிதும் மூழ்கியிருந்தும் அவற்றிலிருந்து எடுத்துப் பாடஞ் செய்த செய்யுட்கள் மிகுதியாய் இல்லை, என்றாலும் அவற்றின் சொற்பொருள் நயங்கள் எமதுள்ளத்தில் வேரூன்றி நின்றன.