உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன் ன

111

'விழுப்புண் படாத நாள் வீண் நாள்" என வீரர்கள் கருதுவது போலவும் பெரியனைப் பேசாத நாளெல்லாம்பிறவா நாளே என அடிகளார் பேசுவது போலவும், "ஓதா நாளெல்லாம் ஒழிந்த நாள் எனக் கொண்டு கற்றவர் அடிகளார்.

"மன அமைதி இன்மையைப் புத்தகங்களைப் படிப்பதால் போக்கிக் கொள்வேன்

"படியாமல் ஒரு நாளைக் கழிப்பது பேரிழப்பாகும்”

ன்று பகல் முழுதும் ஓய்வாக இருந்தேன் ஆனால் எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும் படித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்கவே விரும்புகிறேன். தாம் இன்றுவதற்கும் மெய்யறிவு பெறுவதற்கும் இல்லாமல் தம்மைச் சார்ந்த மக்கள் அறிவு பெறச் செய்தற்கும் அவர்கள் சிறப்புற வாழ்தற்கும் படியாமல் எதற்காக வறிதே ஓய்வாக இருப்பது?

வை அடிகளார் தம் நாட்குறிப்பில் பொறித்துள்ள சில நன்மணிகள். இவற்றால் அடிகளார் கொண்டிருந்த கல்விக் காதல் விளக்கமாகும்.

நூல் எடுத்தலும் முடித்தலும் :

ஓதுதற்கு எடுக்கப்படும் நூல் இன்ன நாளில் எடுக்கப் பட்டது என்றும் இன்ன நாளில் முடிக்கப்பட்டது என்றும் நாட்குறிப்பிலோ நூல்களிலோ குறிப்பது அடிகளார் வழக்கம்.

CC

ஏலாதி படித்து முடிக்கப்பட்டது. ஆசாரக் கோவை படிக்க எடுக்கப்பட்டது" என்பது ஒருநாளில் எழுதிய குறிப்பு.

"ஐந்திணை ஐம்பது படிக்க எடுக்கப்பட்டது" என்பது மற்றொருநாளில் எழுதிய குறிப்பு.

யாழ்ப்பாணத்து வண்ணை நகர் சுவாமிநாதபண்டிதல் 1911 ஆம் ஆண்டில் தேவாரத் திருமுறையைப் பதிப்பித்தார். அப்பதிப்பில் ஒரு நூலை இது பதிப்பாசிரியாரால் சுவாமி வேதாசலம் அவர்களுக்குக் கையுறையாக அனுப்பப்பட்டது. 25.2.1912 என்று எழுதியனுப்பியுள்ளார். அதனை ஓதி முடித்த அடிகளார் அந்நூலின் இறுதியில் "நீண்ட காலமாக ஓதி வந்த இத்தெய்வத் தமிழ்த் திருமறை சாலி 1849 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 3 ஆம் நாள் முடிக்கப்பட்டது. மறைமலையடிகள் 18 ஆம் நாள் டிசம்பர் 1920 ஏ.டி. எனப் பொறித்துள்ளார்.'

""