உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

கோடும் குறியும் :

228

இளங்குமரனார் தமிழ் வளம் - 22

நினைவு கொள்ளத்தக்க சொல்லோ சொற்றொடரோ காணப்பட்டால் அவற்றின் கீழ் அடிக்கோடு இடுதலும் பக்கக் கோடு போடுதலும் அடிகளார் வழக்கமாகும். ஐயுறத் தக்க கருத்துக்களோ மறுதலையான கருத்துக்களோ காணப்பெற்றால் அவ்விடங்களில் வினாக்குறி இடுவார். அச்சுப் பிழைகள் உளவாயின் அச்சு மெய்ப்பைத் திருத்துமாறு இடப்படும் குறியீடுகளை இடுவார்.

ஒப்புமை சுட்டல் :

பயிலும் நூல்கருத்துக்கு ஒத்த கருத்து வேறு நூலில் காணப்படுமாயின் அதனை ஆங்குக் குறித்து வைப்பது அடிகளாரின் வழக்கமாகும். "இயல்பாய ஈசனை என்னும் திருக்கழிப்பாலைத் தேவாரத்தில் வரும் "மயலாய மாயக் குரம்பை” என்னும் தொடருக்கு மலமாக் குரம்பை திருவாசகம் எனக் குறித்துள்ளார்.

"முன்னமிரு மூன்று சமயங்களவையாகி" என்னும் திருப்பு கலித் தேவாரத்தில் இருமுச் சமயத் தொருபேய்த் தேரினை என்னும் திருவாசகப் பகுதியைக் காட்டியுள்ளார்.

இவ்வாறே அரிதாக வழங்கும் சொல்லுக்கு ஒப்புமை காட்டலும் அடிகளார் வழக்காகும். குறுந்தொகை 15 ஆம் பாடல் விளக்கவுரையில் (உ.வே.சா. பதிப்பு) கல்யாணம் என்ற சொல்லைச் சுட்டி "இச்சொல் நாலடியாரில் வந்தது காண்க என்று குறிக்கிறார்.

வரலாறு சுட்டல் :

59

நாட்டு வரலாறு, இலக்கிய வரலாறு, புலவர் வரலாறு முதலிய வரலாற்றுக் குறிப்புகள் காணும் இடங்களில் "Historical" எனக் குறிப்பிடுகிறார். இன்னும் "Historical fact" என்றும் கூறுகிறார். வெண்ணிப் பறந்தலைப் போரை (புறம். 66) "Refers to a great historical war" எனக் குறித்துள்ளார். இக்குறிப்புகள் வரலாற்றுத் தொகுப்புக்கு உதவுதல் ஒருதலை

காலம் காட்டல் :

"இப்பாடல் இக்காலத்துப் பாடப்பட்டது" என்றும், "இப்புலவர் இவர் காலத்துக்கு முற்பட்டவர்" என்றும்,