உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்

113

இன்னவாறு காலநிலை சுட்டுதல் அடிகளார் படித்த நூல்களில் காணக் கிடக்கும் குறிப்புகளுள் ஒன்றாம்.

"வடாஅது பனிபடு நெடுவரை” (6)

"பாணர் தாமரை" (12)

"கடுந்தேர் குழித்த" (15)

"நல்யாழ் ஆகுளி" (64)

என்னும் புறப்பாடல்களில் "இது குமரி நாடு கடல் கொள்ளப் படுமுன் பாடப்பட்டது என்னும், குறிப்புகள் உள்ளன.

"ஆவும் ஆனியல்" என்னும் பாடலில் (9) "இப்பாட்டு பஃறுளியாறு கடல் கொள்ளுவதற்கு முன் பாடப்பட்டது ' என்னும் குறிப்பு உள்ளது.

இவ்வாறே மார்க்கண்டேயனார் (365) கோதமனார் (36) பாடிய புறப்பாடல்களில் "This was Composed in 3000 B.C." என்னும் குறிப்புளது.

இனி, ஒகர முதன்மொழி தொல்காப்பியர் கூறாமையின் அவர் இவர்க்கு (காரி கிழார்க்கு) முற்பட்டவர் என்றுணர்க என்று குறிப்பிடப்பட்டிருப்பதும் (புறம்.6), "சகர முதன்மொழி தால்காப்பியர் சொல்லியற்றிலர் என்று குறிப்பிடப்பட்டி ருப்பதும் (புறம். 365) புறாநானூற்று உரையாசிரியரை "The Commentator was Posterior to Chintamani" என்று குறிப்பிட்டிருப்பதும் அரிய கால ஆராய்ச்சிக் குறிப்புகளாம்."

இது பெற்றாம் எனல் :

செய்யுளில் வரும் குறிப்புக் கொண்டு "இதனால் இது பெற்றாம்" என்று ஒரு வாய்பாட்டு நெறியில் குறிப்பிடல் அடிகளார் வழக்கமாகும்.

தெற்கின் கண்ணது உட்கும் திறம் பொருந்திய கன்னியாற்றின் தெற்கும் என்னும் உரைப்பகுதியில் (புறம்.6) இதனால் குமரியாறு உண்மை பெற்றாம்" என்றும்,

பதினைந்தாம் புறப்பாடலில் "பஃறுளியாறு கடல் கொள்ளப் படுமுன்னரே வேள்வி வேட்டல் உண்மை பெற்றாம் என்றும்,