உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

இளங்குமரனார் தமிழ் வளம் - 22 228

ஐம்பத்தாறாம் புறப்பாடலில்சிவபிரான் முதற்கட் கூறப்பட்டிருத்தலின் இவனே முழுமுதற் கடவுள் என்பது பெற்றாம் என்றும்,

தொண்ணூற்று மூன்றாம் புறப்பாடலில், “தமிழ் மறைகள் அறத்தையே கூறும் என்பது பெற்றாம்" என்றும்,

"மாணிபால்" என்னும் அப்பர் தேவாரத்தில் "செம் பொன்னோடு வேய்ந்தமை அப்பர் காலத்திலேயே உண்மை பெற்றாம்" என்றும் இன்னவாறு குறிப்புகள் உள.

இயற்கையை வியத்தல் :

இயற்கை எழிலில் பெருநாட்டங் கொண்ட அடிகளார், செய்யுளில் வரும் இயற்கைப் புனைவுகளில் தோய்ந்து தோய்ந்து உள்ளூறிய சுவையை அள்ளூறி வியந்து பாராட்டுகிறார்.

அவ்வவ் விடங்களில் "Quite natural" என்றும், "Natural Discription" என்றும், "Fine Natural Discription" என்றும், "Observation of Nature" என்றும் வரைகிறார்.

வல்வில் ஓரி ஏவிய அம்பு வேழத்தையும் வேங்கையையும் மானையும் பன்றியையும் முறையே வீழ்த்தி உடும் பொடுபட்டுத் தங்கியமையை "Natural hyper bole skill in Archer" என்று நயந்து பாராட்டுகிறார். அதன் அடிக்குறிப்பில் "அலையுருவ "வெய்ய வாளியை ஏழு மாமரம்' எனக் காட்டப் பட்டுள்ள கம்பராமாயணப் பாடல்களை "Unnatural berbole" எனக் குறிப்பிட்டுள்ளார்.

66

இக்குறிப்புகளால் இயற்கையை அடிகளார் நெறி திறம்பா முறையில் நோக்கிய நோக்குத் தெளிவாம்.

நலம் பாராட்டல் :

புலவர்களின் பெருமித உணர்வையோ, பிறர்க்கு இல்லாத மேம்பாட்டையோ, ஒப்புயர்வில்லாப் பொருளமைந்த செய்யுளையோ, தாங்குதற்கு அரிய அல்லலையோ பயிலும் போது அவற்றில் தம்மை இழந்து வயப்பட்டு அவற்றின் நலங்களைப் பாராட்டி வரைகிறார் அடிகள். இம்முருகியல் தனிப்பெருஞ் சிறப்பினதாம்.

சோழன் நலங்கிள்ளி ஆவூர் முற்றியிருந்த காலத்து அடைத்திருந்த நெடுங்கிள்ளியைக் கோவூர்கிழார் பாடினார். அப்பாட்டில்,"Very bold request of a poet” என வரைகின்றார்.