உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்

115

சோழன் நலங்கிள்ளியுழை நின்று உறையூர் புகுந்த இளந்தத்தன் என்னும் புலவனைக் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி ஒற்று வந்தான் என்று கொல்லப் புக்குழிக் கோவூர் கிழார் பாடி உய்யக் கொண்ட பாட்டில், “The honesty of the gold poet" என வரைகிறார்.

துறையூர் ஓடைகிழார் பாட்டையும் (புறம்,139) பெருஞ்சித்திரனார் பாட்டையும் படித்து உருகி நைந்து “Extreme poverty of the pet" என வரைகின்றார்.

"யாதும்

ஊரே

புறப்பாட்டையும் (192)

யாவரும் கேளிர்" என்னும்

"நம்பொருள் நம்மக்கள்” என்னும் தேவாரப் பாட்டையும் முறையே மிக உயர்ந்த கொள்கை வாய்ந்த பாட்டு என்றும். "High Moral teaching என்றும் வரைகின்றார்.

ஊர்க்குறு மாக்கள்" என்னும் ஒளவையார் பாடலையும், மைம்மீன் புகையினும் என்னும் கபிலர் பாடலையும் பயின்று, "Very fine Picture" என்றும் “Fine Picture' என்றும் குறிக்கிறார். இத்தகு குறிப்புகள் திறமான பாடல்களைத் தேர்ந்து தொகை செய்யப் பெருந்துணையாம்.

அணிநலம் பாராட்டல் :

உவமை முதலிய அணிநலங்கள் செய்யுளில் இடம் பெற்றிருக்கும் எனின் அவற்றைத் தனித்தனி தரங்கண்டு தனித்தனி அடைமொழி நடையிட அடிகளார் பாராட்டுகிறார்.

எங்கும் பொதுவாகக் காணக் கிடைக்கும் உவமையை 'Simile' என்ற அளவில் குறிக்கிறார். தனிச்சிறப்புடையவற்றை “அழகிய உவமை” எனவும் “Apt simile”, “Fine simile", “Vivid Simile", "Natural simile", "Striking simile from nature”, “High spiritual simile", “Raresimile” என்று தக்காங்கு உரைக்கிறார்.

ஒருதாய் தன் இனிய மகவைக் கொஞ்சிக் கொஞ்சிப் பாராட்டி மகிழ்வதுபோல் உவமையை அடிகளார் கொஞ்சுகிறார்.

இலக்கணம் இயம்பல் :

இலக்கண அருமை இலங்கும் இடங்களில் மிக அரிதான வற்றைச் சுருங்க வரைந்து செல்கிறார் அடிகளார்.