உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்ன

117

பிணர் நால்வகை ஊறுகளுள் ஒன்று; இதனை ஜர்ஜ்ஜரா என்பர் வடமொழியாளர்; அது தமிழில “சருச்சரை” என வழங்கும், இக்காலத்தில் சுரசுரப் பென்பதும் அது" என்னும் விளக்க வுரையில் (குறுந். 13) ஏன் இச் சொல்லில் (சருச்சரை) இருந்து (ஜர்ஜ்ஜரா) வந்த தாகாது? என வினாவுகிறார்.

-

இச்சொல் இவ்வாறு திரிந்தது எனக் காட்டுவதுடன் ஐயுறத் தக்கதாயின "போலும்" என்னும் வாய்பாடு பொருந்த அமைக்கிறார். பக்கம் - பக்கு எனத் திரிந்தது. அயங்கு அசங்கு என்பது அயங்கு என்றாயிற்றுப் போலும் என்பவை இவ்வகைக் குறிப்புகளாம். வழக்குச் சொல், அரிய வழக்குச் சொல் என்பவற்றையும் அடிகளார் ஆங்காங்குச் சுட்டுகிறார். பெண்டாட்டி வழக்குச் சொல். யாரளோ Rare; கொடுக்குவர் - அரிய வழக்கு, நற்கு - Rare Use என்பவன இவற்றுக்குச் சான்றாவன.

-

பிரித்துக் காட்டலும் இயைத்துக் கூட்டலும் :

சில அருஞ்சொற்களைப் பிரித்துக் காட்டி விளக்கம் புரிகிறார் அடிகளார். அவ்வாறு பிரித்துக் காட்டுதல் பொருள் விளக்கத்திற்கு இன்றியமையாமை உடையதாம்.

"போணிலா' என்பதைப் "போழ் நிலா" என்றும்,

'எட்டனை என்பதை 'எள்தனை' என்றும் பிரித்துக் காட்டுகிறார்.

"கொட்ட முழவிட்ட வடிவட்டணைகள் கட்ட” என்னும் தேவாரத் தொடரை,

"முழவொலிக்கு இசைய இட்ட அடிகள் தாங்கட்ட என்க’ என எழுதி இயைத்துக் காட்டுகிறார்.

வைப்பு முறை கூறல் :

அடிகளார் தம் சொற்பொழிவில், பொழிவு நிறைவில் சான்னவற்றைத் தொகுத்துக் கூறுதலை ஒரு நெறியாகக் கொண்டிருந்தார். அம்முறையைக் கட்டுரைகளிலும், நூல்களிலும் மேற்கொண்டார். அதன் சுவடு அவர் பயின்ற நூல்களிலும் காண வாய்கின்றது.

திருஞான சம்பந்தர் தேவாரப் பதிகங்களைக் கற்ற அவர்,

"எட்டாஞ்

செய்யுட்கடோறும்

ஒறுத்தருளினமை கூறுவர்,”

ராவணனை