உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

இளங்குமரனார் தமிழ் வளம் - 22

என்று அருளிச் செய்வாராயினர், இவ்வாறு உண்மையைக் கண்டெழுதுதலிற் கடைப்பிடியாய் நில்லாது' இவர் தெய்வத் தன்மை வாய்ந்த ஆசிரியர், இவரியற்றிய இந்நூலிற் குற்றங் குறையாவது ஏதும்இராது” என்று குருட்டுப்பிடியில் உறைத்து நின்று, தாமும் அவர் நூற்பொருளை யாராயாது, ஆராய்வார் சிலர் தம்மையும் கண்டவாறு புறம் பழித்துப் பேசி உலகினை அறியாமையில் அழுத்துவாரும் உளர். அத்தன் மையினார் உரைகளை ஒரு பொருட்டாக வையாது மெய்ம்மையா ராய்ச்சியிற் செல்லுதலே உலகினைத் தேற்றுஞ் சான்றோர் கடனாமென்க". என்று விரிவாக ஆராய்ச்சித் திறன் குறித்து எழுதியுள்ளார்.

னி

இனி இலக்கிய ஆய்வு செய்வார்க்கு வேண்டும் அரிய தொரு குறிப்பினை முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை மூன்றாம் பதிப்பின் முகவுரையிலே குறிப்பிடுகிறார் அடிகளார். சொல்லாய்வு :

CC

'உலக வழக்கத்திலுள்ள சொற்களைத் தவிர்த்து முல்லைப்பாட்டில் வந்த ஏனை எல்லாச் சொற்களையும் அகர வரிசைப்படுத்தி அவற்றிற்கெல்லாம் பொருள்கள் எழுதியிருக் கின்றோம். இவ்வருஞ் சொற்பொருள் வரிசையின் உதவிகொண்டு இச் செய்யுட் பொருள் உணர்ந்து கொள்வது எவர்க்கும் எளிதேயாம்.

இனி இவ்வருஞ் சொற்கட்குப் பொருள் வரையுங்கால் இம்முல்லைப்பாட்டு வழங்கிய காலத்தில் அதன்கண் வந்த சொற்கட்கு வழங்கிய பொருள்களையும், அக்காலத்தை அடுத்துத் தோன்றிய சான்றோர் நூல்களில் அவற்றிற்கு வழங்கிய பொருள்களையும் எடுத்துக்காட்டியிருக்கின்றேம்.

ஒரு செய்யுள் வழங்கிய காலத்தும் அதனை அடுத்து வந்த காலத்தும் அச்செய்யுட் சொற்கட்குப் பொருள் தெளிவது அச் செய்யுள் ஆக்கியோன் கருத்தை நன்கறிந்து கோடற்குக் கருவியாம் ஆதலின், இங்ஙனஞ் சொற்பொருள் துணிவிக்கும் முறையைத் தமிழாராய்வோர் அனைவரும் கைப்பற்றி ஒழுகுவராயின் நமதருமைச் செந்தமிழ்மொழி சாலவும் விளக்க முடையதாகித் திகழும்" என்கிறார். இக்கருத்தைப் பட்டினப் பாலை இரண்டாம் பதிப்புரையிலும் எழுதுகிறார்.

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை, பட்டினப்பாலை ஆராய்ச்யுரை என்னும் ரண்டிலும் மற்றுமொரு கருத்தை