உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்

123

ஆய்வார்க்கும் ஆய்வுக்கும் நலப்பாடு என்றும் கூறுதல் விளங்கும்.

சார்பு இன்மை :

ஆய்ஞருக்கு, அவர் இவர் என்றோ, அப்பொருள் ப்பொருள் என்றோ, சார்பு சார்பின்மை என்றோ நடுநிலை பிறழ்ந்து ஆய்வு செய்தல் ஆகாது என்றும் அடிகளார் நெறிகாட்டியுள்ளார்.

இங்ஙனம் ஆராய்ந்து செல்லும் நெறியிற் பிழையெனக் கண்டவைகளை மறையாது, அவை பிழைபடுதலைக் கிளந்து சொல்லியிருக்கின்றேம். எல்லாராலும் தெய்வத்தன்மையுடைய வராகக் கொள்ளப்பட்ட ஆசிரியர் நூல்களிலும்பிழையெனக் கண்டவைகளை மறையாது வெளிப்படையாக எடுத்துக் காட்டியிருக்கின்றோம்.

கடவுளல்லாத ஏனை மக்களெல்லாரும் எத்துணைதான் சிறந்தவராயிருப்பினும் பிழைபடாதிரார். இது, தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனாரே,

"அரியகற்று ஆசற்றார் கண்ணுந் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு”

என்று அருளிச் செய்தமையானும் தெளியப்படும்.

ஆகவே, அறிவில்மிகச் சிறந்த சான்றோர்களும் ஒரோ வழிப்பிழைப்படுவராயின், அவர் செய்த அப்பிழைகளை உண்மை விளக்கத்தின் பொருட்டு எடுத்துக் காட்டுதல், அவர்பால்யாம் வைத்துள்ள அன்புக்கும் நன் மதிப்புக்கும் எள்ளளவும் பழுது செய்யாது, ஒரோ ஒரு காற் பேரறிவினர்பால்மெய்யல்லாத தோன்றுதலும் உலகியல் நிகழ்ச்சிகளிற் காணக் கிடத்தலின், உண்மையாராய்ச்சி செய்பவர்கள், அவ்வவர்தம் பெருமை சிறுமை பாராது அவ்வவர்பாற் புலனாவனவற்றிலுள்ள பொய்ம்மை மெய்ம்மைகளை ஆராய்ந்து கண்டெழுதுதலே உலகினை வஞ்சியாது அதற்கு நன்மைபயக்கும் விழுமிய ஒழுகலாறாம், அது தேற்றுதற்கன்றோ ஆசிரியர் திருவள்ளு வனாரும்.

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு”