உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

இளங்குமரனார் தமிழ் வளம் 22

களாலும், முன்னிருந்தோரைப் பின்னிருந்தோர் குறிப்பாலும் வெளிப்படையாலும் நுவலும் நுவற்சிகளாலும், அவ்வந் நூல்களில் குறிப்பிடப்பட்ட சிவபிரான் கோயில்கள் திருமால் கோயில்களைக் கணக்குச் செய்த தொகைகளாலும், கல்வெட்டுகள் செப்பேடுகள் முதலாயினவற்றில் புலனாம் அரசரின் காலக் குறிப்புகளாலும், வடமொழி நூல்கள் அயல் நாட்டவர் வரைந்து வைத்த வரலாற்று நூல்கள் முதலாயினவற்றில் தமிழர் ஆரியர் பற்றி நுவலும் பகுதிகளாலும் இன்னோரன்ன பிறவற்றாலும் தமிழாசிரியர் தமிழ் நூல்களின் காலவரையறைகளும், அவ்வக் கால இயல்புகளும் அவற்றிடையே படும் மாணிக்கவாசகரது காலமும் மிகவும் விழிப்பாக ஆராய்ந்து தெளிவு படுத்தப் பட்டிருக்கின்றன.

சான்று :

உள்ள

இவ்வாறு செய்கின்றுழி, ஒவ்வொன்றுக்குஞ் சான்றுகள் காட்டப்பட்டிருப்பதோடு, சான்றாக எடுக்கப்பட்ட மேற்கோள் நூற்பெயர்களும், அவற்றின்கண் அவை உள்ள இடங்களும் சுட்டிச் சொல்லப்பட்டிருக்கின்றன. இவ்வாறு மேற்கோள்கள் உள்ள இடங்கள் கிளந்து குறிக்கப்பட்டிருத்தலால், இந்நூலைக் கற்பவர்கள் யாம் செய்து காட்டும் ஆராய்ச்சி முடிபுகட்கு உள்ள சான்றுகளைத் தாமும் எளிதிற் கண்டு, எம்முடைய முடிபுகள் பொருந்துமா பொருந்தாவா எனத் தாமே வருத்தமின்றி ஆராய்ந்து தெளிதல் கூடும்.

பெரும்பாலும் தமிழில் உரைநூல்களும் ஆராய்ச்சி நூல்களும் எழுதும் அறிஞர்கள் தமதுகோட்பாடுகட்குச் சான்றாகக் காட்டும் மேற்கோள்கள் உள்ள நூற்பெயர்களைக் கூட மொழியாது போவர்; ஏனென்றால், அங்ஙனங்குறித்துக் காட்டுதற்குப் பொறுமையும், பேருழைப்பும், நூல்களும் வேண்டும். யாம் எம்முடைய வருத்தத்தையும் காலக் கழிவினையும் பொருட்பட செலவினையும் பாராது, உலகத்தில் உண்மை விளங்கி எல்லாரையும் உய்வித்தல் வேண்டும் என்பதொன்றனையே கடைப்பிடியாகக் கொண்டு, ஒவ்வொன் றுக்கும் மேற்கோள்களும் இடங்களும் குறித்திருத்தலை அன்பர்கள் கருதிப்பார்த்து, இம்முறையினைத் தாமும் கையாண்டு உண்மை ஆராய்ச்சியினை ஓம்பு வாராக!"

இவ்வாறு தம் ஆய்வுமுறை இன்னதென்றும், இம்முறை துயர்க்கும் இழப்புக்கும் உரியது எனினும் உண்மை காண்டற்கு ன்றியமையாதது என்றும் இதனை மேற்கொள்ளல்