உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்ன

121

நூல்களின் காலவரையறை தெரியாத வரையிற் பழையது புதியதாகவும், புதியது பழையதாகவும், மெய் பொய்யாகவும், பொய் மெய்யாகவும் முன்னிருந்த ஆசிரியர்பின்னிருந்த வராகவும், பின்னிருந்தவர் முன்னிருந்தவராகவும் கொள்ளப்பட்டு உண்மை சிறிதும் விளங்காமற் பெரியதொரு தலைதடுமாற்றமே தலைவிரித்தாடும்.

கால ஆராய்ச்சி செய்து அவ்வக் கால நிலைகளையும் அவ்வக் காலத்திருந்த ஆசிரியர் நிலைகளையும் உணராமை யினாற்றான், நம் நாட்டவர்கள் பொய்க் கதைகளிலும் பொய்த் தெய்வ வணக்கங்களிலும் போலியாசிரியர் மருளுரைகளிலும் வீழ்ந்து மயங்கி உண்மையறிவு வாயாதவர்களாய், அதனாற்றம் பிறவியைப் புனிதப்படுத்தும் வழிவகைகள் தெரியாதவர்களாய், அறிவும் ஆற்றலும் இன்றித் தம்முட் பகையும் பொறாமையும் கொண்டு நோயிலும் வறுமையிலும் உழன்று, தீவினைக்காளாகி மங்கி மடிந்து போகின்றனர். எனவே இம்மக்கட் பிறவியைத் தெய்வப் பிறவி ஆக்குதற்கு இன்றியமையாத கருவியாய் மேம்பட்டு விளங்குவது கால ஆராய்ச்சியால் உரங்கொண்டு துலங்கும் மெய்யறிவு விளக்கமேயாம்.

இத்துணைச் சிறந்த கால ஆராய்ச்சி முறை இத்தமிழ் நாட்டகத்திலுள்ள அறிஞர் எவராலும் ஒழுங்காகக் கடைப் பிடிக்கப்பட்டு நம் தமிழ் மொழிக்கண் உள்ள எந்த நூலிலும் இதுகாறும் விரிவாகக் காட்டப்படாமையின் மாணிக்கவாசகர் வரலாற்றினும் மாணிக்க வாசகர் காலம் எம்மால் நான்மடங்கு பெருக்கி எழுதப்படுவதாயிற்று" என்கிறார்.

எவ்வெவ் வகையாலெல்லாம் ஆராய்ச்சி மேற்கொள்ளப் பட்டது என்பதையும், சான்றுகள் எல்லாம் எவ்வாறு வைக்கப் பட்டுள்ளன என்பதையும் தெளிவாக வரையறுத்துக் கூறுகிறார்: கால ஆய்வு முறை :

புதிது புகுந்த தமிழ்ச் சொல் வடசொற்களாலும், முற்காலத்தின்றிப் பிற்பிற் காலங்களில் தோன்றிய தெய்வ வணக்கங்களாலும், முன்நூல்களில் இன்றிப் பின் நூற்களிற் புனைந்து சேர்க்கப்பட்ட புராணக் கதைகளாலும்,முற்பிற் காலங்களிலும் பொருள் வேறுபட்ட சொற்களாலும், சமயக் கோட்பாடுகளாலும், காலங்கள் தோறும் புதிது தோன்றிய பாவகைகளாலும், முன்னாசிரியர் நூலிலுள்ள சொற் பொருட் குறிப்புகளைப் பின்னாசிரியர் தம் நூலுள் எடுத்தாளும் வகை